சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
இடுகை இடப்பட்ட நாள்:
18 NOV 2026 12:30PM by PIB Chennai
இந்திய மருத்துவ ஆராய்ச்சி குழுமம் 100 வெற்றிகரமான தொழில்நுட்ப பரிமாற்ற ஒப்பந்தங்களை மேற்கொண்டு ஒரு சிறப்பம்சத்தை எட்டியுள்ளது. இது உள்நாட்டு சுகாதார ஆராய்ச்சிகளைப் பொதுமக்கள் பயன்பாட்டிற்கான தொழில்நுட்பங்களாகவும், தீர்வுகளாகவும் மாற்றுவதில் ஒரு சிறந்த படியாகும். புதுதில்லி பாரத் மண்டபத்தில் நிறைவடைந்த சுகாதார ஆராய்ச்சி சிறப்பு உச்சி மாநாட்டில் இது குறித்து அறிவிக்கப்பட்டது.
சுகாதார ஆராய்ச்சி துறையும் (டிஎச்ஆர்) இந்திய மருத்துவ ஆராய்ச்சி குழுமமும் (ஐசிஎம்ஆர்) இணைந்து 2026 நவம்பர் 16,17-ம் தேதி ஆகிய இரண்டு நாட்கள் இந்த உச்சி மாநாட்டை நடத்தின. இதில் ஐசிஎம்ஆர்-ன் நிறுவனங்கள், கூட்டு நிறுவனங்கள், அரசு அமைப்புகள், கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றைச் சேர்ந்த 600-க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள், புதுமைக் கண்டுபிடிப்பாளர்கள், நிர்வாகிகள், கொள்கை வகுப்பாளர்கள் ஆகியோர் பங்கேற்றனர். அத்துடன் நாட்டில் உயிரி மருத்துவம், சுகாதார ஆராய்ச்சியில் ஐசிஎம்ஆர்-ன் 115 ஆண்டுகால பங்களிப்பையும் இந்த உச்சி மாநாடு குறித்தது.
இந்த உச்சி மாநாடு சுகாதார ஆராய்ச்சியில் சிறந்து திகழ்வோரை அங்கீகரிக்கவும், அறிவியல் சான்றுகளை நடைமுறைக்கு ஏற்ற தீர்வுகளாக மாற்றுவதை ஊக்குவிக்கவும் ஒரு தேசிய தளமாக உள்ளது. இது ஐசிஎம்ஆர் நிறுவனங்கள், கூட்டு நிறுவனங்கள் மேற்கொண்ட ஆராய்ச்சி வெளியீடுகள், தொழில்நுட்பங்கள், காப்புரிமைகள், ஆராய்ச்சி மேலாண்மை சார்ந்த முக்கிய பங்களிப்புகளை வெளிப்படுத்துவதுடன் ஆராய்ச்சியாளர்கள், தொழில்துறையினர், கொள்கை வகுப்பாளர்கள் இடையே ஒருங்கிணைப்பையும் ஏற்படுத்துகிறது.
இந்த உச்சி மாநாட்டில் சுகாதார ஆராய்ச்சி, நோய் கண்காணிப்பு ஆகியவற்றை வலுப்படுத்துவதற்கான மூன்று புதிய முன்முயற்சிகள் தொடங்கப்பட்டது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2337773®=3&lang=1
***
SK/IR/SM/PS