ஜல்சக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தூய்மைக்கான சிறப்பு இயக்கம்: மத்திய நீர்வளம், நதிகள் மேம்பாடு மற்றும் கங்கை புத்துயிரூட்டல் துறையின் தூய்மை நடவடிக்கைகள்

இடுகை இடப்பட்ட நாள்: 18 NOV 2026 11:49AM by PIB Chennai

மத்திய நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறையின் கீழ், ஜல் சக்தி அமைச்சகத்தின் நீர்வளத்துறை, நதிகள் மேம்பாடு மற்றும் கங்கை புத்துயிரூட்டல் துறையால் 2026 அக்டோபர் 2 முதல் 31 வரை தூய்மைக்கான சிறப்பு இயக்கம் செயல்படுத்தப்பட்டது. இத்துறையின் கீழ் செயல்படும் அமைப்புகளும் தூய்மை நடவடிக்கைகளில் ஈடுபட்டு, நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளைக் கடந்து குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை பதிவு செய்துள்ளன.

இந்த சிறப்பு இயக்கத்தின் கீழ், 12,626 மின்னணுக் கோப்புகள், 12,183 காகிதக் கோப்புகள் மறுஆய்வு செய்யப்பட்டதுடன், 4,324 கோப்புகள் அகற்றப்பட்டுள்ளன. மேலும், 515 இடங்கள் தூய்மைப்படுத்தப்பட்டன. கழிவுப்பொருட்கள், மின்னணுக் கழிவுகளை அகற்றியதன் மூலம் ரூ.94,60,482 வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. பொதுமக்களின் 186 குறைகள், பிரதமர் அலுவலகம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் குறிப்புகள் ஆகியவற்றுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2337755&reg=3&lang=1

***

SK/PD/PS

 


(வெளியீட்டு அடையாள எண்: 2337811) வருகையாளர் எண்ணிக்கை : 6
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Gujarati