இடுகை இடப்பட்ட நாள்:
17 NOV 2026 7:37PM by PIB Chennai
மத்திய சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்றத் துறை அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ், இந்திய-ஜப்பான் கூட்டுக் கடன் வழங்கும் வழிமுறையை (ஜேசிஎம்) செயல்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை எடுத்துரைத்துள்ளார். மேலும், நிதி திரட்டுவதற்கும், தொழில்நுட்பப் பரிமாற்றத்தை எளிதாக்குவதற்கும், குறைந்த கார்பன் வளர்ச்சியை முன்னெடுப்பதற்கும் அதன் ஆற்றலை அவர் வலியுறுத்தினார். துருக்கியின் அன்டால்யாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் பருவநிலை மாற்றக் கட்டமைப்பு ஒப்பந்தத்தின் (யுஎன்எஃப்சிசிசி) சிஒபி 31-வது மாநாட்டின் ஜப்பான் அரங்கில் நடைபெற்ற 12-வது ஜேசிஎம் கூட்டாளர் நாடுகளின் கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர், இது போன்ற வழிமுறைகள், வளரும் நாடுகளின் தேசிய முன்னுரிமைகளை ஆதரிப்பதுடன், சமமான, விரிவாக்கக்கூடிய பருவநிலை ஒத்துழைப்பையும் ஊக்குவிக்கும் என்று கூறினார்.
ஜப்பானுடன் நெருக்கமாகப் பணியாற்றுவதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்திய அமைச்சர், ஜேசிஎம் வழிமுறையின் வெற்றியை, உமிழ்வு குறைப்பு அளவீடுகளைக் கொண்டு மட்டுமின்றி, திரட்டப்பட்ட நிதி, பரிமாற்றம் செய்யப்பட்ட தொழில்நுட்பங்கள், உள்நாட்டுத் திறன்களை வலுப்படுத்துதல், நிலையான மேம்பாட்டு நன்மைகள் ஆகியவற்றைக் கொண்டும் மதிப்பிட வேண்டும் என்று குறிப்பிட்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2337615®=3&lang=1
****
SK/BR/SH