விவசாயத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வளரும் நாடுகளில் வேளாண் ஒத்துழைப்பு, அறிவுசார் பரிமாற்றத்தை வலுப்படுத்த ஐசிஏஆர் – ஆர்ஐஎஸ் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது

இடுகை இடப்பட்ட நாள்: 17 NOV 2026 5:31PM by PIB Chennai

இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுமமும் (ஐசிஏஆர்), வளரும் நாடுகளுக்கான ஆராய்ச்சி மற்றும் தகவல் அமைப்பும் (ஆர்ஐஎஸ்), வளரும் நாடுகளிடையே வேளாண் ஒத்துழைப்பு மற்றும் அறிவுசார் பரிமாற்றத்தை வலுப்படுத்தும் நோக்கில் புதுதில்லியில் 2026 நவம்பர் 17 அன்று புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

வேளாண் ஆராய்ச்சி, கல்வித்துறை செயலாளரும் ஐசிஏஆர்-ன் தலைமை இயக்குநருமான டாக்டர் எம் எல் ஜாட், ஆர்ஐஎஸ்-ன் தலைமை இயக்குநர் பேராசிரியர் சச்சின் குமார் சர்மா ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை பரிமாறிக் கொண்டனர்.

தக்‌ஷின் – வளரும் நாடுகளுக்கான சிறப்பு மையம் மூலம் செயல்படுத்தப்படும் இந்த கூட்டாண்மை வேளாண் தொழில்நுட்பங்களை பகிர்ந்துகொள்வது, சிறந்த நடைமுறைகளை ஆவணப்படுத்துவது, அறிவுசார் பரிமாற்றம், திறன் மேம்பாடு ஆகியவற்றில் கவனம் செலுத்தும்.

வளரும் நாடுகள்: புதிய உத்திசார் கூட்டாண்மையை நோக்கி என்ற தலைப்பில் உயர்நிலைக் கொள்கை உரையாடலில் தொடக்க அமர்வில் உரையாற்றிய வெளியுறவுத்துறை இணையமைச்சர் திரு கீர்த்தி வர்தன் சிங், பொருளாதார மீள்திறனை கட்டமைப்பதிலும், வளர்ந்துவரும் தொழில்நுட்பங்கள் குறிப்பாக செயற்கை நுண்ணறிவுக்கான சமமான அணுகலை உறுதி செய்வதிலும், வளரும் நாடுகள் தங்களுடைய கூட்டு வலியுறுத்தலை வலுப்படுத்த வேண்டும் என்று கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2337536®=3&lang=1

****

SK/IR/LDN/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2337652) வருகையாளர் எண்ணிக்கை : 11
இந்த வெளியீட்டை படிக்க: English , Gujarati , Urdu , हिन्दी