மாநிலங்களவைச் செயலகம்
azadi ka amrit mahotsav

மத்தியப் பிரதேசத்திலிருந்து மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட திரு ஹர்தீப் சிங் பூரிக்கு மாநிலங்களவைத் தலைவர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்

இடுகை இடப்பட்ட நாள்: 17 NOV 2026 2:10PM by PIB Chennai

மத்தியப் பிரதேசத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு ஹர்தீப் சிங் பூரிக்கு, நாடாளுமன்றத்தில் மாநிலங்களவைத் தலைவர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

பதவிப் பிரமாண நிகழ்வின்போது, மக்களவை உறுப்பினர்களான மத்திய இளைஞர் நலன், விளையாட்டுத் துறை மற்றும் தொழிலாளர், வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா; மத்திய பஞ்சாயத்து ராஜ், மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வளத் துறை அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங்; மத்திய சட்டம், நீதித்துறை, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் திரு அர்ஜுன் ராம் மேக்வால் ஆகியோர் உடனிருந்தனர். மாநிலங்களவை பொதுச் செயலாளர் திரு பி.சி. மோடி, செயலகத்தின் பிற மூத்த அதிகாரிகளும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2337362&re&reg=48&lang=2  

***

PD/SE/GS


(வெளியீட்டு அடையாள எண்: 2337418) வருகையாளர் எண்ணிக்கை : 21
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Gujarati