சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

45-வது இந்திய சர்வதேச வர்த்தகக் கண்காட்சியில் சமூக நீதி, அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் பங்கேற்பு நிலையான வாழ்வாதாரங்களை மேம்படுத்துவதற்கான அதன் உறுதிப்பாட்டை வலுப்படுத்துகிறது

இடுகை இடப்பட்ட நாள்: 16 NOV 2026 7:52PM by PIB Chennai

மத்திய சமூக நீதி, அதிகாரமளித்தல் அமைச்சகம், தலைநகரில் உள்ள பாரத மண்டபத்தில் நடைபெற்று வரும் 45-வது இந்திய சர்வதேச வர்த்தகக் கண்காட்சியில் பங்கேற்பதன் மூலம், பாரம்பரிய கைவினைத்திறன், தொழில்முனைவு, நிலையான வாழ்வாதார வாய்ப்புகளைத் தொடர்ந்து ஊக்குவித்து வருகிறது.

நவம்பர் 15, 2026 நிலவரப்படி, அமைச்சகத்தின் அரங்கு சுமார் ரூ. 5.50 லட்சம் மதிப்பிலான விற்பனையைப் பதிவு செய்துள்ளது. இது, சமூகத்தின் பின்தங்கிய, விளிம்புநிலை பிரிவுகளைச் சேர்ந்த கைவினைஞர்கள், தொழில்முனைவோருக்காக உருவாக்கப்பட்டு வரும் சந்தை வாய்ப்புகளை எடுத்துரைக்கிறது.

இந்த வர்த்தகக் கண்காட்சியில் 19 மாநிலங்களைச் சேர்ந்த 130-க்கும் மேற்பட்ட கைவினைஞர்கள் பங்கேற்கின்றனர். கைவினைஞர்கள் பார்வையாளர்களுடன் நேரடியாக உரையாடவும், நுகர்வோரின் விருப்பங்களைப் புரிந்துகொள்ளவும், சந்தையில் உருவாகி வரும் புதிய போக்குகளைக் கண்டறியவும், தங்கள் தயாரிப்புகளை விற்பனை செய்வதன் மூலம் வருமானம் ஈட்டவும் இந்தக் கண்காட்சி வாய்ப்பு வழங்குகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2337140&reg=3&lang=1

***

SK/BR/GS


(வெளியீட்டு அடையாள எண்: 2337347) வருகையாளர் எண்ணிக்கை : 11
இந்த வெளியீட்டை படிக்க: हिन्दी , English , Urdu