சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
இடுகை இடப்பட்ட நாள்:
16 NOV 2026 6:48PM by PIB Chennai
கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தைச் சேர்ந்த 33 வயதான ரமேஷ் கவுடா (பெயர் மாற்றப்பட்டுள்ளது), மதுப்பழக்கத்திலிருந்து மீண்டு வாழ்க்கையில் முன்னேறியுள்ளார். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் (OBC) சேர்ந்த இவர், முன்பு சொந்தமாகத் தொழில் செய்து வந்தார். குடும்பப் பிரச்சினைகள், மன அழுத்தம் காரணமாக அவ்வப்போது மது அருந்திய பழக்கம் நாளடைவில் அதிகரித்தது. இதனால் தொழில் பாதிக்கப்பட்டதுடன், பொருளாதார நிலையும் குடும்ப உறவுகளும் சீர்குலைந்தன.
இதையடுத்து, கோலாரில் உள்ள போதைப் பொருள் பாதிப்புக்கான மறுவாழ்வு ஒருங்கிணைந்த மையத்தை தாமாகவே அணுகினார். 2024 ஜனவரி 6 முதல் அவருக்குத் தொடர்ந்து ஆலோசனைகள், ஊக்கமளிக்கும் வழிகாட்டுதல், மருத்துவ சிகிச்சை சார்ந்த உதவிகள் வழங்கப்பட்டன.
மேலும், குடும்ப உறுப்பினர்களிடையே நல்ல புரிதலை ஏற்படுத்த குடும்ப ஆலோசனையும் வழங்கப்பட்டது. இதன் மூலம் அவரது நம்பிக்கை அதிகரித்து, குடும்ப உறவுகள் மேம்பட்டன. மீண்டும் தொழிலில் கவனம் செலுத்தத் தொடங்கிய அவர், தற்போது நிலையான வருமானம் ஈட்டுகிறார்.
மத்திய சமூக நீதி, அதிகாரமளித்தல் அமைச்சகம், போதைப்பொருள் தடுப்புக்கா தேசிய செயல் திட்டத்தின் கீழ் இத்தகைய மறுவாழ்வு மையங்களுக்கு ஆதரவளிக்கிறது. உரிய வழிகாட்டுதல் கிடைத்தால் போதைப் பழக்கத்திலிருந்து மீண்டு வாழ்வாதாரத்தை மேம்படுத்த முடியும் என்பதற்கு ரமேஷின் வாழ்க்கை ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2337086®=3&lang=1
***
SK/PLM/GS