இடுகை இடப்பட்ட நாள்:
16 NOV 2026 6:35PM by PIB Chennai
மத்திய பட்டு வாரியத்தின் ஆராய்ச்சி ஒருங்கிணைப்புக் குழுவின் 72-வது கூட்டம், இன்று பெங்களூருவில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கவுன்சிலின் கீழ் இயங்கும் இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனத்தில் நடைபெற்றது. இக்கூட்டம், பட்டு வளர்ப்புத் துறையின் நிலையான வளர்ச்சிக்காக, ஆராய்ச்சி ஒருங்கிணைப்பை வலுப்படுத்துதல், தொழில்நுட்ப முன்னேற்றங்களை விரைவுபடுத்துதல், புத்தாக்கத்தை ஊக்குவித்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்தியது.
வேளாண் ஆராய்ச்சி, கல்வித் துறையின் செயலாளரும், இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கவுன்சிலின் தலைமை இயக்குநருமான டாக்டர் மங்கி லால் ஜாட் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், மத்திய பட்டு வாரியத்தின் உறுப்பினர் செயலர் திரு பி. சிவகுமார், இந்திய அரசின் ஜவுளி அமைச்சகத்தின் இயக்குநர் திரு பூர்ணேஷ் குருராணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்த ஆலோசனைகள், பட்டு வளர்ப்புத் துறையில் ஈடுபட்டுள்ளவர்களின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்தவும், உற்பத்தித் திறனை அதிகரிக்கவும், பட்டின் தரத்தை மேம்படுத்தவும், தரமான ஆராய்ச்சி, நிறுவனங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பு, மேம்பட்ட தொழில்நுட்பங்களைச் செயல்படுத்துதல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தின.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2337073®=3&lang=1
***
SK/BR/GS