இடுகை இடப்பட்ட நாள்:
16 NOV 2026 8:23PM by PIB Chennai
உலக அளவிலான நியாயமான எரிசக்தி மாற்ற நடவடிக்கைகள் வெறும் பேச்சுகளோடு நின்றுவிடாமல், ஒவ்வொரு நாட்டின் தேவைகளுக்கு ஏற்ப நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் வலியுறுத்தியுள்ளார்.
துருக்கியின் அன்டல்யா நகரில் நடைபெறும் ஐநா பருவநிலை மாற்ற மாநாட்டின் அமைச்சர்கள் நிலையிலான உயர்நிலைக் கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்தார். எரிசக்தி மாற்றத் திட்டங்கள், வேலைவாய்ப்பு, சமூகப் பாதுகாப்பு, பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் நடவடிக்கைகள், வறுமை ஒழிப்பு, அனைவருக்கும் எரிசக்தி கிடைப்பது ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
வளரும் நாடுகள் தங்களது முன்னுரிமைகளுக்கு ஏற்ப திட்டங்களைச் செயல்படுத்த போதிய நிதியுதவி, தொழில்நுட்பப் பரிமாற்றம், திறன் மேம்பாடு ஆகியவை அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்தியாவில் செயல்படுத்தப்படும் வெப்ப அலை தடுப்பு நடவடிக்கைகள், பேரிடர் மேலாண்மைத் திட்டங்கள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி விரிவாக்கம் ஆகியவற்றை உதாரணங்களாக அவர் சுட்டிக்காட்டினார்.
நாடுகளின் இறையாண்மையையும் தனித்துவமான சூழ்நிலைகளையும் மதிக்கும் வகையில், நியாயமான எரிசக்தி மாற்ற வழிமுறை உருவாக்கப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.
எந்த நாட்டின் மீதும் ஒரே மாதிரியான திட்டங்களைத் திணிக்கக் கூடாது எனவும், மக்களின் நலன் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இந்தியாவின் வளர்ச்சித் தேவைகளைப் பாதுகாத்து, அனைவரையும் உள்ளடக்கிய நியாயமான எரிசக்தி மாற்றத்தை உருவாக்க மற்ற நாடுகளுடன் இணைந்து செயல்பட இந்தியா தயாராக உள்ளது என்றும் அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2337158®=3&lang=1
***
SK/PLM/GS