இடுகை இடப்பட்ட நாள்:
16 NOV 2026 7:29PM by PIB Chennai
புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெறும் இந்திய சர்வதேச வர்த்தகக் கண்காட்சி வளாகத்தில், 'வளர்ச்சியும் பாரம்பரியமும்' என்ற கருப்பொருளில் அமைக்கப்பட்டுள்ள சிறப்புக் கைத்தறி, கைவினைப் பொருட்கள் கண்காட்சியை மத்திய ஜவுளித்துறை அமைச்சர் கிரிராஜ் சிங் இன்று (2026 நவம்பர் 16) தொடங்கி வைத்தார்.
இந்தியாவின் பாரம்பரியக் கலைகளைப் பறைசாற்றும் வகையில், வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு என நான்கு பகுதிகளின் கலைப் படைப்புகள் இதில் இடம்பெற்றுள்ளன. வடக்கில் பனாரஸ் பட்டு நெசவு உள்ளிட்ட கைத்தறி, கலை வடிவங்களும், தெற்கில் தமிழ்நாடு, கர்நாடகம் ஆகிய மாநிலங்களின் மரச்சிற்பம், பட்டுநெசவு, உலோகக் கலைகளும், கிழக்கில் ஒடிசா, மேற்கு வங்கத்தின் பாரம்பரிய நெசவு வகைகளும், மேற்குப் பகுதியான மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்களின் கண்ணாடி வேலைப்பாடு, லிப்பன் கலை, மரச்சிற்பங்கள் போன்றவை இதில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
கைத்தறி, கைவினை, சணல் தொழில்களில் ஒரு கோடிக்கும் அதிகமான கைவினைக் கலைஞர்கள் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் வருமானம், வேலைவாய்ப்பை அதிகரிக்க மூலப்பொருள், தொழில்நுட்பம், வடிவமைப்பு, சந்தை வாய்ப்புகள் ஆகியவற்றில் அரசு அவர்களுக்கு ஆதரவு அளித்து வருகிறது.
நவம்பர் 27 வரை நடைபெறும் இக்கண்காட்சியில், 21க்கும் மேற்பட்ட மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த கலைஞர்களின் 200 அரங்குகள் இடம்பெற்றுள்ளன. இதில் 100 கைத்தறி, 100 கைவினைப் பொருட்கள் அரங்குகள் அடங்கும். பொதுமக்கள் தினமும் காலை 10 மணி முதல் இரவு 7.30 மணி வரை இதைப் பார்வையிடலாம்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2337119®=3&lang=1
(Release ID: 2337119)
****
SK/PLM/SH