சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
இடுகை இடப்பட்ட நாள்:
16 NOV 2026 6:30PM by PIB Chennai
சமூக நீதி, அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் சமூக நீதி, அதிகாரமளித்தல் துறை, பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பாதுகாப்பு நிலங்கள் தலைமை இயக்குநரகத்துடன் இன்று தலைநகரில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தம், ராணுவ முகாம் பகுதிகளில் வசிக்கும் முதியவர்களின் நலன், நல்வாழ்வை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், சமூக நீதி, அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் ஆகியோரின் முன்னிலையில், சமூக நீதி, அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் இயக்குநர் திருமிகு காஜல் சிங், பாதுகாப்பு நிலங்கள் தலைமை இயக்குநரகத்தின் துணைத் தலைமை இயக்குநர் திரு மானே அமித்குமார் ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை முறைப்படி பரிமாறிக்கொண்டனர்.
இந்த நிகழ்வில் உரையாற்றிய மத்திய அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார், கவுரவமிக்க, பாதுகாப்பான, சுறுசுறுப்பான முதுமைக் காலத்தை ஒவ்வொரு முதியவருக்கும் உறுதி செய்வதில், பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையிலான அரசின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார். மேலும், குடிமக்கள், குறிப்பாக இளைஞர்கள், ராணுவ முகாம் வாரியங்களின் அதிகாரிகள், பணியாளர்கள் அனைவரும் 'வாயோ சாதி' எனப்படும் முதியவர்களுக்கு ஆதரவளிக்கும் தன்னார்வலர்களாகப் பதிவு செய்துகொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.
நிகழ்ச்சியல் பேசிய திரு ராஜ்நாத் சிங், முதியவர்கள் குடும்பத்தின் உறுப்பினர்கள் மட்டுமின்றி, அனுபவங்கள், மரபுகள், சமூக மாண்புகளைக் கொண்டு செல்பவர்கள் என்றும் குறிப்பிட்டார். 2047-ம் ஆண்டிற்குள் 'வளர்ச்சியடைந்த இந்தியா’ என்ற இலக்கை அடைவதற்கான பயணத்தில், அவர்களது வழிகாட்டுதலும் ஞானமும் முக்கியப் பங்காற்றும் என்று அவர் தெரிவித்தார். அமைதியான, இணக்கமான, அறிவுசார் சமூகங்களை உருவாக்குவதற்கான பயணத்தில், அவர்களது அனுபவமும், ஞானமும், வழிகாட்டுதலும் விலைமதிப்பற்றதாக இருக்கும் என்று திரு சிங் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2337069®=3&lang=1
****
SK/BR/SH