கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கப்பல் கட்டுமானத்துறையில் உலகின் முதல் 5 நாடுகளில் ஒன்றாக இந்தியாவை இடம்பெறச் செய்ய இலக்கு : மத்திய அமைச்சர் சர்பானந்த சோனோவால்

இடுகை இடப்பட்ட நாள்: 16 NOV 2026 6:54PM by PIB Chennai

இந்தியாவை 2030-ஆம் ஆண்டுக்குள் உலகின் முன்னணி 10 கப்பல் கட்டுமான நாடுகளில் ஒன்றாகவும், 2047-ஆம் ஆண்டுக்குள் முதல் 5 நாடுகளில் ஒன்றாகவும் உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால் கூறியுள்ளார். இதற்காக, புதிதாக அமைக்கப்படவுள்ள 5 கப்பல் கட்டுமான மையங்களில் சுமார் 10 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீட்டை ஈர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

புதுதில்லியில் நடைபெற்ற இந்திய கப்பல் கட்டுமான முதலீட்டு மாநாட்டில் அவர் இதனைத் தெரிவித்தார். அப்போது கப்பல் கட்டுமானம், பழுதுபார்ப்புத் துறைகளுக்கான 'நவுகோஷ்' (Naukosh) இணையதளத்தையும் தொடங்கி வைத்தார்.

ஆந்திரப் பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா, ஒடிசா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் துகராஜ்பட்னம், குச்சாடி, திகி, கேந்திரபடா, தூத்துக்குடி ஆகிய இடங்களில் புதிய கப்பல் கட்டுமான மையங்கள் அமைக்கப்பட உள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

இந்தியாவில் தயாரிப்போம்; இந்தியாவுக்காகவும், உலக நாடுகளுக்காகவும் கப்பல்களை உருவாக்குவோம் என்று அமைச்சர் கூறினார். இத்திட்டங்கள் வேலைவாய்ப்பு, தொழில்நுட்ப வளர்ச்சி, ஏற்றுமதி ஆகியவற்றை அதிகரிக்கும் என்றும் அவர் தெரிவித்தார். இந்தியாவைத் தன்னிறைவு பெற்ற, வளர்ச்சியடைந்த நாடாக மாற்றுவதில் கப்பல் கட்டுமானத் துறை முக்கியப் பங்கு வகிக்கும் என்று அமைச்சர் தெரிவித்தார்.

30 வெளிநாட்டு கப்பல் கட்டுமான நிறுவனங்கள் இம்மாநாட்டில் பங்கேற்றன. இந்தியாவின் கொச்சியில் உள்ள கப்பல் கட்டுமான நிறுவனமும், நெதர்லாந்தின் டாமென் நிறுவனமும் இணைந்து செயல்பட ஒப்பந்தம் செய்துகொண்டன.

'நவுகோஷ்' இணையதளம், முதலீடு, அனுமதி, நிதி, பயிற்சி உள்ளிட்டவை தொடர்பான தகவல்களை ஒரே இடத்தில் வழங்கும்.

மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்துத் துறைச் செயலர் திரு விஜய் குமார், முதலீட்டாளர்களுடன் தொடர்ந்து ஆலோசித்து திட்டங்களை விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2337092®=3&lang=1&_gl=1

(Release ID : 2337092)

****

SK/PLM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2337201) வருகையாளர் எண்ணிக்கை : 5
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी