இடுகை இடப்பட்ட நாள்:
16 NOV 2026 5:54PM by PIB Chennai
இந்திய தேசிய விளையாட்டு வாரியத்தின் புதிய தலைமைப் பொறுப்பாளர்கள் இன்று (2026 நவம்பர் 16) புதுதில்லியில் தங்களது பொறுப்புகளை ஏற்றுக்கொண்டனர்.
ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியான தேவேஷ் சதுர்வேதி, தேசிய விளையாட்டு வாரியத்தின் தலைவராகப் பொறுப்பேற்றார். ஓய்வுபெற்ற கடற்படை அதிகாரியான கமடோர் புஷ்பேந்திர குமார் கார்க், வாரியத்தின் உறுப்பினராகப் பொறுப்பேற்றார்.
இவ்விருவரின் நியமனங்களுக்கும் மத்திய அமைச்சரவையின் நியமனக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
தேசிய விளையாட்டு நிர்வாகச் சட்டம், 2025-ன் கீழ் தேசிய விளையாட்டு வாரியம் அமைக்கப்பட்டது. தேசிய விளையாட்டு வாரிய விதிகளின் மூலம் இந்த அமைப்பு செயல்பாட்டுக்கு வந்தது.
இந்தியாவில் தேசிய விளையாட்டு அமைப்புகளுக்கு அங்கீகாரம் வழங்கும் மிக உயர்ந்த மத்திய அமைப்பாக தேசிய விளையாட்டு வாரியம் செயல்படுகிறது.
மேலும், தேசிய விளையாட்டு அமைப்புகள் முறையான நிர்வாக நடைமுறைகள், நிதி மேலாண்மை, நேர்மையான செயல்பாடு ஆகியவற்றைக் கடைப்பிடிப்பதை உறுதி செய்வதும் இந்த வாரியத்தின் முக்கியப் பணிகளாகும்.
மேலும் விவரங்களுக்கு இது ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2337047®=3&lang=1
(Release ID : 2337047)
****
SK/PLM/SH