இடுகை இடப்பட்ட நாள்:
16 NOV 2026 5:56PM by PIB Chennai
மத்திய சிறுபான்மையினர் நலத்துறை, வாத்வானி அரசு செயற்கை நுண்ணறிவு அகாடமியுடன் இணைந்து, ‘டிஜிட்டல் மாற்றத்திற்கான செயற்கை நுண்ணறிவு’ என்ற தலைப்பில் ஒருநாள் பயிலரங்கை நடத்தியது. இன்று (2026 நவம்பர் 16) நடைபெற்ற இந்தப் பயிலரங்குக்கு, துறையின் செயலர் டாக்டர் ஸ்ரீவத்ச கிருஷ்ணா தலைமை வகித்தார். இதில் மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர்.
செயற்கை நுண்ணறிவு, இயந்திரக் கற்றல், ஆழ்நிலைக் கற்றல், உருவாக்கும் செயற்கை நுண்ணறிவு ஆகிய தொழில்நுட்பங்களை அரசுப் பணிகளில் பயன்படுத்துவது குறித்து இதில் விளக்கப்பட்டது.
செயற்கை நுண்ணறிவு, நிர்வாகத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று செயலாளர் குறிப்பிட்டார். இதன் மூலம் கிடைக்கும் நன்மைகளுடன், அபாயங்களையும் அதிகாரிகள் அறிந்திருக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
ஆய்வு, தகவல் சேகரிப்பு, ஆவணச் செயலாக்கம், நிர்வாக முடிவுகள் ஆகியவற்றில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவது குறித்த செய்முறைப் பயிற்சிகளும் விளக்கங்களும் இதில் அளிக்கப்பட்டன.
துணைச் செயலாளர் நிலைக்குக் கீழுள்ள அதிகாரிகளுக்கு நவம்பர் 18-ம் தேதி அடுத்த பயிற்சி நடைபெற உள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2337050®=3&lang=1
(Release ID : 2337050)
****
SK/PLM/SH