சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
இடுகை இடப்பட்ட நாள்:
16 NOV 2026 4:58PM by PIB Chennai
கோவாவின் தெற்கு பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலை-66-ன் ஒரு பகுதியான 7.74 கிலோமீட்டர் நீளமுள்ள நான்கு வழிச் சாலையான கனகோனா புறவழிச்சாலை, நவீனச் சாலை உள்கட்டமைப்பையும் கோவா கடற்கரையின் இயற்கை எழிலையும் ஒன்றிணைக்கிறது. மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகத்தால் கட்டமைக்கப்பட்டு 2019-ம் ஆண்டு முதல் பயன்பாட்டில் உள்ள இந்தப் புறவழிச்சாலை, சார் ரஸ்தா முதல் மாஷெம் வரை இணைப்பு வசதியை வழங்குகிறது. கல்கிபாக், தல்போனா, மாக்செம் ஆகிய 3 ஆறுகளின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலங்கள் வழியாகச் செல்லும் இப்பாதை, பசுமையான நிலப்பரப்பு, அரபிக்கடலின் அழகிய காட்சிகளை வழங்குகிறது.
மகாராஷ்டிராவின் பன்வெல் முதல் தமிழ்நாட்டின் கன்னியாகுமரி வரை சுமார் 1,600 கிலோமீட்டர் நீளத்திற்கு 5 மாநிலங்கள் வழியாகச் செல்லும் தேசிய நெடுஞ்சாலை-66, மேற்கு கடற்கரையோர நகரங்கள், வர்த்தக மையங்கள், துறைமுகங்களை இணைத்து இந்தப் பிராந்தியத்தின் பொருளாதார வளர்ச்சிக்குப் பெரிதும் துணைபுரிகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2336983®=3&lang=1
****
SK/PD/SH