வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வண்ணமயமாக மாறிய குப்பை கொட்டும் இடம்

இடுகை இடப்பட்ட நாள்: 16 NOV 2026 3:06PM by PIB Chennai

புதுதில்லியில் உள்ள படேல் செஸ்ட் என்ற இடம் நீண்டகாலமாக குப்பை கொட்டும் இடமாக பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில், நகர்ப்புற தூய்மை இயக்கம் சார்பில், அங்குள்ள குப்பைகள் அகற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து, பயன்படுத்தப்பட்ட 3 ஆயிரம் செங்கற்கள், 45 பழைய டயர்கள் உள்ளிட்டவைகளை பயன்படுத்தி, அந்த இடம் அழகுபடுத்தப்பட்டது. வண்ணத்துபூச்சிகள் உள்ளிட்ட ஓவியங்கள் வரையப்பட்ட நிலையில், அப்பகுதி அழகுடன் வண்ணமயமாக காட்சி அளிக்கிறது. புதுதில்லி பல்கலைக்கழகத்திற்கு அருகில் உள்ள இந்த அழகிய இடத்தை அவ்வழியே செல்வோர் செல்பி எடுத்துச் செல்கின்றனர். மேலும், பயன்படுத்தப்படாத ஆடைகள், புத்தகங்கள், பொம்மைகள், மின்னணு கழிவுகள் ஆகியவை இங்கு சேகரிக்கப்பட்டு, மறுசுழற்சிக்கு உட்படுத்தப்படுகின்றன. குப்பை கொட்டும் இடமாக இருந்த படேல் செஸ்ட் பகுதி தற்போது வண்ணமயமாக காட்சி அளிப்பது பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2336878&reg=3&lang=1

****

SK/LN/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2337184) வருகையாளர் எண்ணிக்கை : 17
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी