தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
azadi ka amrit mahotsav

உயிரிவாயுத் தொழில்நுட்பத்தின் முன்னோடி ராம் பக்ஸ் சிங் நினைவு அஞ்சல் தலை வெளியீடு

இடுகை இடப்பட்ட நாள்: 16 NOV 2026 4:06PM by PIB Chennai

உயிரிவாயுத் தொழில்நுட்பம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறைகளில் சர்வதேச அளவில் புகழ்பெற்ற இந்திய விஞ்ஞானி திரு ராம் பக்ஸ் சிங் அவர்களை கௌரவிக்கும் வகையில், மத்திய அஞ்சல் துறை 2026 நவம்பர் 13 அன்று சிறப்பு நினைவு அஞ்சல் தலையை வெளியிட்டுள்ளது. புதுதில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணையமைச்சர் திரு ராம்தாஸ் அத்வாலே, தில்லி வட்ட முதன்மை அஞ்சல் துறைத் தலைவர் கர்னல் அகிலேஷ் குமார் பாண்டே ஆகியோர் இணைந்து இந்த அஞ்சல் தலையை வெளியிட்டனர்.

கிராமப்புற சமூகங்களுக்கு நிலையான எரிசக்தித் தீர்வாக உயிரிவாயுத் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதில் திரு ராம் பக்ஸ் சிங் முன்னோடியாகத் திகழ்ந்தார். 1957-ம் ஆண்டில் உத்தரப் பிரதேசத்தின் சீதாபூரில் இந்தியாவின் ஆரம்பகால சாண எரிவாயு ஆலைகளில் ஒன்றை அவர் தொடங்கி வைத்தார். பின்னர் அஜித்மலில் அமைக்கப்பட்ட ஆசியாவின் முதல் சாண எரிவாயு ஆராய்ச்சி நிலையத்தின் பொறுப்பு அதிகாரியாக 16 ஆண்டுகள் பணியாற்றியதுடன், 15-க்கும் மேற்பட்ட நாடுகளின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டங்களுக்கும் பங்களித்துள்ளார்.

தூய்மையான எரிசக்தி, நிலையான கிராமப்புற வளர்ச்சிக்கு அவர் ஆற்றிய மகத்தான சேவையைப் போற்றும் விதமாக இந்த நினைவு அஞ்சல் தலை வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2336918&reg=3&lang=1

****

SK/PD/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2337168) வருகையாளர் எண்ணிக்கை : 9
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Bengali