எரிசக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்திய சர்வதேச வர்த்தக கண்காட்சியில் நிறுவப்பட்டுள்ள மின் அமைச்சகத்தின் அரங்கு மின் துறையில் நடைபெற்றுள்ள சாதனைகள், முன்முயற்சிகள் குறித்து எடுத்துரைக்கிறது

இடுகை இடப்பட்ட நாள்: 16 NOV 2026 3:35PM by PIB Chennai

புதுதில்லி பாரத் மண்டபத்தில் நடைபெற்று வரும் 45-வது இந்திய சர்வதேச வர்த்தக கண்காட்சியில் நிறுவப்பட்டுள்ள மின் அமைச்சகத்தின் அரங்கு கடந்த பத்து ஆண்டுகளில் மின் துறையில் நடைபெற்றுள்ள சாதனைகள் முன்முயற்சிகள் குறித்து எடுத்துரைக்கிறது. மின்துறைத் தொடர்பான முன்முயற்சிகளை எளிமையாகவும், கண்காட்சி பார்வையாளர்களுக்கு பொழுதுபோக்கு அனுபவமாகவும் மாற்றும் வகையில் அந்த அரங்கில் பல்வேறு தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. இதில் 3டி காட்சி, சூழலும் எல்இடி திரை, 3டி திட்ட மாதிரிகள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.

இந்த அரங்கை மின்துறைச் செயலாளர் திரு பங்கஜ் அகர்வால் திறந்து வைத்தார். அப்போது அரங்கம் குறித்த கையேடு வெளியிடப்பட்டது.

இந்த அரங்கம் மின் அமைச்சகத்தின் கீழ் உள்ள பல்வேறு நிறுவனங்கள், இந்தியாவின் உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதிலும் நிலையான எரிசக்தி பாதுகாப்பு கொண்ட நாட்டை உருவாக்குவதற்கான தொலைநோக்குப் பார்வையை முன்னெடுத்துச் செல்வதிலும் தாங்கள் மேற்கொண்ட பங்களிப்புகளை வெளிப்படுத்துவதற்கான பொதுவான தளமாக அமைந்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2336895&reg=3&lang=1

***

SS/IR/SM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2337085) வருகையாளர் எண்ணிக்கை : 3
இந்த வெளியீட்டை படிக்க: हिन्दी , English , Urdu