இடுகை இடப்பட்ட நாள்:
16 NOV 2026 12:42PM by PIB Chennai
மின்னணுக் கழிவுகள், லித்தியம்-அயன் மின்கலக் கழிவுகளை மறுசுழற்சி செய்வதன் மூலம் முக்கிய உலோகங்களைப் பிரித்தெடுக்கும் உள்நாட்டுத் தொழில்நுட்பத்தை மேம்படுத்தவும், வணிகமயமாக்கவும் மத்திய அறிவியல், தொழில்நுட்பத் துறையின் கீழ் செயல்படும் தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியம், தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த நியோசீக்கர் மெட்டல்ஸ் தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கோண்டுள்ளது.
இத்திட்டத்தின் மொத்த மதிப்பு ரூ.20 கோடியாகும். ஆராய்ச்சி, மேம்பாடு & புத்தாக்க நிதியின் கீழ் ரூ.10 கோடி நிதியுதவி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்பத் தயார்நிலையை 5-வது நிலையிலிருந்து, 9-வது நிலைக்கு உயர்த்தி, வணிகரீதியான பயன்பாட்டிற்கு முன்னெடுத்துச் செல்வதே இத்திட்டத்தின் நோக்கமாகும். தூய்மையான எரிசக்தி, நவீனத் தொழில்நுட்பங்களை நோக்கிய இந்தியாவின் பயணத்தில் முக்கியக் கனிமங்களின் பாதுகாப்பான விநியோகத்தை உறுதி செய்யவும், சுழற்சிப் பொருளாதாரத்தை வலுப்படுத்தவும் இந்த முயற்சி உதவும் என்று தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியச் செயலாளர் திரு ராஜேஷ் குமார் பதக் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2336782®=3&lang=1
***
SS/PD/SH