இடுகை இடப்பட்ட நாள்:
16 NOV 2026 1:29PM by PIB Chennai
மத்திய அறிவியல், தொழில்நுட்பத்துறையின் கீழ் இயங்கும் உயிரித்தொழிநுட்பத் துறை சார்பில், 2026 அக்டோபர் 2 முதல் 31-ம் தேதி வரை தூய்மைக்கான சிறப்பு இயக்கம்-6 வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது. தூய்மை, குறைதீர்ப்பு, ஆவணங்கள் மேலாண்மை, பழைய பொருட்கள் அகற்றல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அந்தவகையில், 191 இடங்களில் சுத்தம் செய்யும் பணி நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பயனற்ற 3373 மின்னணு பொருட்கள் அகற்றப்பட்டதன் மூலம், ரூ.50.79 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது. தேவையற்ற பொருட்கள், கோப்புகள் அகற்றப்பட்டதன் வாயிலாக 71,363 சதுர அடி அலுவலக இடம் விடுவிக்கப்பட்டது. 11,598 கோப்புகள் ஆய்வு செய்யப்பட்டு, அதில் தேவையற்ற 8666 கோப்புகள் அகற்றப்பட்டன. இதேபோல், 17,013 மின்னணு கோப்புகள் ஆய்வு செய்யப்பட்டு, 5835 மின்னணு கோப்புகள் அகற்றப்பட்டன. 58 புகார் மனுக்கள், 5 மேல்முறையீட்டு மனுக்களுக்கு தீர்வுகாணப்பட்டது. தூய்மை, அலுவலக மேலாண்மை உள்ளிட்ட பணிகளில் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை தாண்டி, அதிகளவில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக உயிரித்தொழிநுட்பத்துறை தெரிவித்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2336819®=3&lang=1&_gl=1
***
SS/LN/RJ