சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தூய்மைக்கான சிறப்பு இயக்கம் 6.0: சுங்கச் சாவடிகளில் உள்ள 500 கழிவறைகள் புதுப்பிப்பு

இடுகை இடப்பட்ட நாள்: 16 NOV 2026 3:31PM by PIB Chennai

மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகமும், அதன் கீழ் செயல்படும் அமைப்புகளும் தூய்மைக்கான சிறப்பு இயக்கம் 6.0-ஐ வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளன. இந்த இயக்கத்தின் கீழ், 2026 அக்டோபர் 2 முதல் 31 வரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் மூலம், 95,000 கிலோமீட்டருக்கும் அதிகமான தேசிய நெடுஞ்சாலைகள், அனுகு சாலைகள் பள்ளங்கள் இல்லாத வகையில் சீரமைக்கப்பட்டன. 65,000 கிலோமீட்டர் தூரத்திற்கு சாலைக் குறியீடுகளும் அமைக்கப்பட்டுள்ளன. தேசிய நெடுஞ்சாலைகளில் 7,000 கிலோ மீட்டருக்கும் அதிகமான தொலைவுக்கு மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. மேலும் 4,960-க்கும் மேற்பட்ட இடங்களில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, சுமார் 5,000 கழிப்பறைகள் சுத்தம் செய்யப்பட்டுள்ளதுடன், சுங்கச்சாவடிகளில் உள்ள 500-க்கும் மேற்பட்ட கழிப்பறைகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன.

இந்த சிறப்பு தூய்மை இயக்கத்தின் போது, பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 5,960 குறைகள், 1,013 மேல்முறையீடுகள், நாடாளுமன்ற உறுப்பினர்களின் பரிந்துரைகள், மாநில அரசுகளின் பரிந்துரைகள் ஆகியவற்றிற்குத் தீர்வு காணப்பட்டு 100 சதவீதத்திற்கும் அதிகமான இலக்கு எட்டப்பட்டுள்ளது. மேலும் 14,625 பழைய கோப்புகள் ஆய்வு செய்யப்பட்டதுடன், மின்னணுக் கழிவுகள் உள்பட 1,134 கிலோவிற்கும் அதிகமான பழைய பொருட்கள் அகற்றப்பட்டதன் மூலம் ரூ.1,20,100 வருவாயும் ஈட்டப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2336893&reg=3&lang=1

***

AD/PD/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2336994) வருகையாளர் எண்ணிக்கை : 7
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी