சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தில்லி தேசிய விலங்கியல் பூங்காவில் 21-வது பறவை நடைப்பயணம்

இடுகை இடப்பட்ட நாள்: 15 NOV 2026 8:16PM by PIB Chennai

பல்லுயிர் கண்காணிப்பு, வனவிலங்கு பாதுகாப்பில் பொதுமக்களின் பங்களிப்பை ஊக்குவிக்கும் நோக்கில், புதுதில்லியில் உள்ள தேசிய விலங்கியல் பூங்கா, 2026 நவம்பர் 15 அன்று காலை பறவை நடைப்பயணம்  நிகழ்வின் 21-வது பதிப்பை நடத்தியது.  பறவையியல் நிபுணர் திரு வினீத் குமாரின் வழிகாட்டுதலின் கீழும், அர்ப்பணிப்புள்ள தன்னார்வலர்களின் ஆதரவுடனும் இந்நிகழ்வு நடைபெற்றது.

பறவை ஆர்வலர்கள், இயற்கை விரும்பிகள், மாணவர்கள், வனவிலங்கு புகைப்படக் கலைஞர்கள், பல்லுயிர் பெருக்கத்தில் ஆர்வம் கொண்ட குடிமக்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். இந்த நடைப்பயணத்தில் உயிரியல் பூங்கா அதிகாரிகளும், துறை சார்ந்த நிபுணர் ஒருவரும் பங்கேற்றனர்.  அவர்கள் பங்கேற்பாளர்களுடன் உரையாடியதுடன், இந்த நிகழ்வு முழுவதும் தங்கள் கருத்துகளையும் அவர்களுடன் பகிர்ந்துகொண்டனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2336665&reg=3&lang=1

***

SK/RB/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2336890) வருகையாளர் எண்ணிக்கை : 6
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी