இடுகை இடப்பட்ட நாள்:
14 NOV 2026 6:51PM by PIB Chennai
பெல்ஜியத்தின் கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் டாங்கய் போட்மேன், இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு கடல்சார் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதையும், கடற்படைகளுக்கு இடையிலான உறவுகளை மேலும் ஆழப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு, 2026 நவம்பர் 14 அன்று இந்தியாவுக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டுள்ளார்.
இந்தியா வந்தடைந்த அவர், தேசிய போர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். அதனைத் தொடர்ந்து, சவுத் பிளாக்கில் அவருக்கு அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.
இந்த வருகையின் போது, ரியர் அட்மிரல் டாங்கய் போட்மேன், கடற்படைத் தளபதி அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதனுடன் கலந்துரையாடினார். கடல்சார் பாதுகாப்பு, செயல்பாட்டு ஈடுபாடுகள், பயிற்சி, பணியாளர் பரிமாற்றங்கள், கடற்படைத் தொழில்நுட்ப ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து அவர்கள் விவாதித்தனர். மேலும், இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வழிகளைக் கண்டறிய அவர் பிற மூத்த அதிகாரிகளுடனும் கலந்துரையாடினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2336275®=3&lang=1
***
AD/RB/RJ