சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சமூக நீதி, அதிகாரமளித்தல் துறைக்கும் பாதுகாப்புத்துறை நிலங்களின் தலைமை இயக்குநரகத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகிறது

இடுகை இடப்பட்ட நாள்: 14 NOV 2026 6:32PM by PIB Chennai

சமூக நீதி, அதிகாரமளித்தல் அமைச்சகத்தின்கீழ் இயங்கும் சமூக நீதி, அதிகாரமளித்தல் துறையும், பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பாதுகாப்பு நிலங்கள் தலைமை இயக்குநரகமும் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில்  கையெழுத்திட உள்ளன. இந்த நிகழ்வு நவம்பர் 16 அன்று தலைநகர் தில்லியில் நடைபெறவுள்ளது.

ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் நிகழ்வு, பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், சமூக நீதி, அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் ஆகியோர் முன்னிலையில் நடைபெறும். நாடு முழுவதும் உள்ள ராணுவ முகாம் வாரியங்களில், அடல் மூத்த குடிமக்களுக்கான மேம்பாட்டுத்  திட்டத்தின் கீழ் முதியோர் நலத் திட்டங்களைச் செயல்படுத்துவதற்காக, இந்த இரு அமைப்புகளுக்கும் இடையே ஒத்துழைப்பு, ஒருங்கிணைப்பு, ஒன்றிணைப்புக்கான ஒரு கட்டமைப்பை உருவாக்குவதே இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் நோக்கமாகும்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2336265&reg=3&lang=1

***

AD/RB/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2336631) வருகையாளர் எண்ணிக்கை : 6
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी