இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தெலங்கானாவில் டிசம்பர் 11 முதல் கேலோ இந்தியா இளையோர் விளையாட்டுப் போட்டி: இலச்சினை, சின்னம் ஆகியவற்றை வெளியிட்டார் மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா

இடுகை இடப்பட்ட நாள்: 15 NOV 2026 3:47PM by PIB Chennai

8-வது கேலோ இந்தியா இளையோர் விளையாட்டுப் போட்டிக்கான இலச்சினை, சின்னம் ஆகியவற்றை மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, தெலங்கானா முதல்வர் ஏ. ரேவந்த் ரெட்டி ஆகியோர் தில்லியில் இன்று (15.11.2026) அறிமுகப்படுத்தினர். இப்போட்டி 2026 டிசம்பர் 11 முதல் 22-ம் தேதி வரை தெலங்கானாவில் நடைபெற உள்ளது.

நிகழ்ச்சியில் பேசிய திரு மன்சுக் மாண்டவியா,  இளைஞர்களை விளையாட்டுகளில் அதிகம் ஈடுபடுத்த வேண்டும் என்ற முனைப்புடன் பிரதமர் திரு நரேந்திர மோடி செயல்படுவதாக கூறினார். விளையாட்டுக்கு முக்கிய இடம் அளிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார். கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் இளைஞர்களை ஊக்குவிக்க தேசிய விளையாட்டுகள், கடற்கரை விளையாட்டுகள், குளிர்கால விளையாட்டுகள், பழங்குடியினர் விளையாட்டுப் போட்டிகள் போன்றவை நடத்தப்படுவதாகவும் திரு மன்சுக் மாண்டவியா கூறினார்.

தெலங்கானா முதலமைச்சர் திரு ரேவந்த் ரெட்டி பேசுகையில், இத்தகைய போட்டிகள் போதைப் பழக்கத்திலிருந்து இளைஞர்களை விடுவித்து, வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க உதவும் என்று கூறினார்.

2026 டிசம்பர் 11-ல் தொடங்கும் 8-வது கேலோ இந்தியா இளையோர் விளையாட்டுப் போட்டி, ஹைதராபாத், கம்மம், கரீம்நகர், ஹனுமகொண்டா, மகபூப்நகர், நிஜாமாபாத் ஆகிய 6 நகரங்களில் நடைபெற உள்ளன. சுமார் 8,000 வீரர்கள் இதில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தம் 29 விளையாட்டுப் பிரிவுகள் இதில் இடம்பெறும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2336512&reg=3&lang=1

****

TV/PLM/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2336609) வருகையாளர் எண்ணிக்கை : 16
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Assamese , Gujarati