பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஜார்க்கண்ட் மாநில நிறுவன தினத்தை முன்னிட்டு அம்மாநில மக்களுக்கு பிரதமர் வாழ்த்து

இடுகை இடப்பட்ட நாள்: 15 NOV 2026 3:02PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (15.11.2026) ஜார்க்கண்ட் மாநிலத்தின் நிறுவன தினத்தை முன்னிட்டு, அம்மாநில மக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

ஜார்க்கண்டை பழங்குடியினரின் பெருமை, கலாச்சார பன்முகத்தன்மை, இயற்கை வளம் ஆகியவற்றின் தனித்துவமான சங்கமம் என்று வர்ணித்துள்ள பிரதமர், அதன் அடர்ந்த காடுகள், அழகான நீர்வீழ்ச்சிகள், வரலாற்றுச் சின்னங்கள் ஆகியவை அதன் தனித்துவமான அடையாளத்தை வளப்படுத்துவதாகக் கூறியுள்ளார். அதே நேரத்தில் அதன் பாரம்பரியங்கள், பகவான் பிர்சா முண்டாவின் வீரம், தியாகக் கதைகள் ஆகியவற்றிலிருந்து தொடர்ச்சியான உத்வேகம் கிடைப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கனிமங்கள், எரிசக்தி தொடங்கி கைவினைப்பொருட்கள், சுற்றுலா வரை மாநிலத்தில் உள்ள மகத்தான ஆற்றலை அவர் எடுத்துரைத்துள்ளார். கடின உழைப்பும் திறமையும் கொண்ட மக்களின் உறுதியாலும் திறமையாலும், ஜார்க்கண்ட் வளர்ச்சியின் புதிய உயரங்களை எட்டும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளதோடு, அனைவருக்கும் மகிழ்ச்சியும் செழிப்பும் கிடைக்க பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2336496&reg=3&lang=1

****

TV/PLM/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2336561) வருகையாளர் எண்ணிக்கை : 8
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Assamese , Gujarati , Telugu , Malayalam