இடுகை இடப்பட்ட நாள்:
15 NOV 2026 2:16PM by PIB Chennai
காமன்வெல்த் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைப்பின் இந்தியப் பிராந்திய மாநாட்டை, மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா, 2026 நவம்பர் 17-ல் பெங்களூரு சட்டமன்றத்தில் தொடங்கி வைக்கிறார். தொடக்க நிகழ்வில் கர்நாடக முதலமைச்சர் திரு டி.கே. சிவகுமார் முக்கிய உரையாற்றுகிறார். மாநிலத் துணை முதலமைச்சர் திரு ஜி. பரமேஸ்வரா, மாநிலங்களவைத் துணைத் தலைவர் திரு ஹரிவன்ஷ், கர்நாடக சட்டப்பேரவைத் தலைவர் திரு ஜி.எஸ். பாட்டீல், காமன்வெல்த் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தியப் பிராந்திய தலைவர் திருமதி புரந்தேஸ்வரி ஆகியோர் இதில் பங்கேற்றுப் பேசுகின்றனர். கர்நாடக சட்ட மேலவைத் தலைவர் திரு சலீம் அகமது வரவேற்புரை நிகழ்த்த, துணைத் தலைவர் உமாஸ்ரீ நன்றியுரை வழங்குகிறார். பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் பெண் சட்டமன்ற உறுப்பினர்கள் இதில் பங்கேற்கின்றனர்.
‘வலுவான அடித்தளம், வலுவான குரல்கள்: அனைவரையும் உள்ளடக்கிய இணையவெளி, புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் உறுப்பினர்களுக்கான வழிகாட்டுதல்’ என்பது மாநாட்டின் கருப்பொருளாகும். நவம்பர் 17-ம் தேதி நடைபெறும் முதல் அமர்வு, பெண்கள் இணையத்தைப் பாதுகாப்பாகவும் திறமையாகவும் பயன்படுத்துவது குறித்து விவாதிக்கும். நவம்பர் 18-ம் தேதி நடைபெறும் இரண்டாவது அமர்வு, பெண் உறுப்பினர்களின் நாடாளுமன்ற/சட்டமன்றப் பணித்திறனை மேம்படுத்துதல், குறிப்பாகப் புதிய உறுப்பினர்களுக்கு வழிகாட்டுதல் வழங்குதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தும்.
மாநாடு நவம்பர் 18-ம் தேதி நிறைவடைகிறது. நிறைவு நிகழ்வில் கர்நாடக ஆளுநர் டாக்டர் சுதா யாதவ் உரையாற்றுகிறார். ஜனநாயக அமைப்புகளில் பெண்களின் பங்கேற்பையும் தலைமைத்துவத்தையும் வலுப்படுத்துவதே இம்மாநாட்டின் நோக்கமாகும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2336480®=3
****
TV/PLM/RJ