வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்
இடுகை இடப்பட்ட நாள்:
13 NOV 2026 9:24PM by PIB Chennai
2026 நவம்பர் 11 அன்று புதுதில்லியில் நடைபெற்ற விழாவில், தூய்மைப் பணிக்கான விருதுகளை குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு வழங்கினார். இந்த நிகழ்வின்போது, நகர்ப்புற தூய்மை இந்தியா இயக்கம் 2.0-ன் கீழ் ஒரு முதன்மையான திட்டமான தூய்மையான இணை நகர முன்முயற்சியின் கீழ், சிறப்பாகச் செயல்பட்ட முதல் மூன்று இணை நகரங்களை வீட்டுவசதி, நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் அறிவித்தது.
அறிவிக்கப்பட்ட 191 இணை நகரங்களில், ஒவ்வொரு வழிகாட்டி நகரத்திலிருந்தும் மிகச் சிறப்பாகச் செயல்பட்ட இணை மட்டுமே கருத்தில் கொள்ளப்பட்டது. அந்த வகையில் அகமதாபாத்-சனந்த், இந்தூர்- தெபல்பூர், திருப்பதி-குப்பம் ஆகியவை முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளன. அமைச்சகம் வெளியிட்டுள்ள தகுதியுள்ள வழிகாட்டி-வழிகாட்டப்படும் இணை நகரங்களின் பட்டியலில் தமிழகத்தின் நாமக்கல்- கிளாம்பாடி நகரங்களும், புதுச்சேரியின் உழவர்கரை-காரைக்காலும் இடம்பெற்றுள்ளன.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2336057®=3&lang=1
***
SK/BR/SH