பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சிறந்த நிர்வாகத்துக்கான பிரதமரின் விருதுகள் : 16 விருதுகளுக்கு விண்ணப்ப நடைமுறைகள் தொடக்கம்

இடுகை இடப்பட்ட நாள்: 13 NOV 2026 9:06PM by PIB Chennai

அரசு நிர்வாகத்தில் சிறப்பாகப் பணியாற்றும் அரசு அதிகாரிகளின் பங்களிப்பைப் பாராட்டி ஊக்குவிக்கும் வகையில் வழங்கப்படும் பிரதமரின் சிறந்த நிர்வாகத்துக்கான விருதுகள் 2026-க்கான இணையதளத்தை மத்திய நிர்வாகச் சீர்திருத்தம், பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறை இன்று (13.11.2026) தொடங்கியுள்ளது. விருதுகளுக்கான விண்ணப்பப் பதிவும் இன்று தொடங்கியது.

காணொலி வாயிலாக நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சியில், மத்திய அமைச்சகங்கள்/ துறைகளின் அதிகாரிகள், மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களின் நிர்வாகச் சீர்திருத்தத் துறை செயலர்கள், மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட 2,000-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

மூன்று பிரிவுகளில் 16 விருதுகள்:

*மாவட்டங்களின் ஒட்டுமொத்த வளர்ச்சி: முன்னுரிமை அளிக்கப்பட்ட 12 துறைகளில் சிறப்பாகச் செயல்படும் மாவட்டங்களுக்கு 5 விருதுகள்.

*வளர்ச்சியை விரும்பும் வட்டாரங்கள் திட்டம்: 5 விருதுகள்.

* புதுமையான திட்டங்கள்: மத்திய அமைச்சகங்கள், மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள், மாவட்டங்களின் புதிய முயற்சிகளுக்கு 6 விருதுகள்.

மாவட்டங்களின் ஒட்டுமொத்த வளர்ச்சிப் பிரிவில் இந்த ஆண்டு 9 புதிய திட்டங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அவை:

நகர்ப்புற தூய்மை பாரத இயக்கம், அம்ருத் திட்டம், ஞான பாரதம், பிரதமரின் மீன்வள மேம்பாட்டுத் திட்டம், காசநோய் இல்லாத இந்தியா இயக்கம், பயிர் பல்வகைப்படுத்தல், பிரதமரின் ஸ்ரீ பள்ளிகள், ஊரக தூய்மை இந்தியா இயக்கம், இயற்கை விவசாயத்துக்கான தேசிய இயக்கம், ஐஜிஓடி மூலம் திறன் மேம்பாடு ஆகியவை அவையாகும்.

விருதுகளும் ஊக்கத்தொகையும்:

விருது பெறும் மாவட்டம் அல்லது அமைப்புக்கு கோப்பை, பாராட்டுச் சான்றிதழ் மற்றும் ரூ.20 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும். இந்தத் தொகையை மக்கள் நலத் திட்டங்களைச் செயல்படுத்தவும், தேவையான வளங்களின் பற்றாக்குறையைப் போக்கவும் பயன்படுத்தலாம்.

இணையதளம்: https://pmawards.gov.in/

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2336039&reg=3&lang=1

(Release ID : 2336039)

****

SK/PLM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2336076) வருகையாளர் எண்ணிக்கை : 11
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu