சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நஜஃப்கர் மருத்துவமனையில் 3 மாதங்களில் 94,927 நோயாளிகளுக்கு சிகிச்சை : மத்திய அமைச்சர் ஜெ.பி. நட்டா பாராட்டு

இடுகை இடப்பட்ட நாள்: 13 NOV 2026 5:32PM by PIB Chennai

புதுதில்லி நஜஃப்கரில் உள்ள ஊரக சுகாதாரப் பயிற்சி மையத்தின் மருத்துவச் சேவைகள் தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் திரு ஜெ.பி. நட்டா ஆய்வு செய்தார்.

2026 ஆகஸ்ட் முதல் அக்டோபர் வரை இம்மையத்தில் 94,927 புறநோயாளிகளுக்கும், 35,985 அவசர சிகிச்சை நோயாளிகளுக்கும் இங்கு சேவை வழங்கப்பட்டுள்ளது. 198 பேர் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டதுடன், 101 பெரிய அறுவை சிகிச்சைகள், 590 சிறிய அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த சேவைகளுக்கு அமைச்சர் பாராட்டுத் தெரிவித்தார்.

நவீன ஆய்வக வசதிகள், அல்ட்ராசவுண்ட், பிசியோதெரபி உள்ளிட்ட சேவைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. 350-க்கும் மேற்பட்ட மருந்துகள் மருந்தகத்தில் கிடைக்கின்றன. 2027 ஜனவரிக்குள் ரத்த சேமிப்பு மையம், பிரேதப் பரிசோதனைக் கூடம் ஆகியவற்றை செயல்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2335913&reg=3&lang=1

(Release ID : 2335913)

****

SK/PLM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2336073) வருகையாளர் எண்ணிக்கை : 4
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी