தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
இடுகை இடப்பட்ட நாள்:
13 NOV 2026 3:42PM by PIB Chennai
தேவையற்ற வணிக அழைப்புகள், குறுஞ்செய்திகளைக் கட்டுப்படுத்த, 2026 ஜூலை 1 முதல் செப்டம்பர் 30 வரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த காலாண்டு அறிக்கையை இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் வெளியிட்டுள்ளது.
அந்த மூன்று மாதங்களில் தேவையற்ற வணிகத் தொடர்புகள் குறித்து 15.29 லட்சம் புகார்கள் பெறப்பட்டன. அவற்றில் நடவடிக்கை எடுக்கத் தகுதியான 7.23 லட்சம் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதன்படி, விதிமீறிய 1,10,325 தொலைத்தொடர்பு இணைப்புகள் 15 நாட்களுக்குத் தடை செய்யப்பட்டன. மீண்டும் விதிமீறிய 13,777 இணைப்புகள் ஓராண்டுக்குத் துண்டிக்கப்பட்டன. 374 விளம்பர அனுப்புநர்களுக்கு தொலைத் தொடர்பு இணைப்புகள் ஓராண்டுக்குத் தடை செய்யப்பட்டதுடன், 3,725 குறுஞ்செய்தி அனுப்பும் அடையாளக் குறியீடுகளும் முடக்கப்பட்டன.
டிராய் டிஎன்டி (TRAI DND) செயலி: இந்தச் செயலி மூலம் 4.236 மில்லியன் பதிவிறக்கங்கள் செய்யப்பட்டுள்ளன. மொத்த புகார்களில் 92.9 சதவீதம் (14.21 லட்சம்) இச்செயலி மூலம் பெறப்பட்டுள்ளன. இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த 322 நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
தனித்த எண்கள்: விளம்பர அழைப்புகளுக்கு 140 என்று தொடங்கும் எண்களும், வங்கிகள், நிதி நிறுவனங்கள், காப்பீட்டு நிறுவனங்கள், அரசு தொடர்புகளுக்கு 1600 என்று தொடங்கும் எண்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. போக்குவரத்து, சரக்குப் பட்டுவாடா, அத்தியாவசிய சேவை நிறுவனங்களின் அழைப்புகளுக்கு 2026 ஆகஸ்ட் 10 முதல் 1601 என்று தொடங்கும் எண்கள் அறிமுகப்பட்டுள்ளன.
இந்தக் காலாண்டில் 140 என தொடங்கும் எண்கள் மூலம் 1,527 கோடி விளம்பர அழைப்புகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2335818®=3&lang=1
(Release ID : 2335818)
****
SK/PLM/SH