வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தின் தூய்மைக்கான சிறப்பு இயக்கம் 6.0-ன் கீழ் 736 பொதுமக்கள் குறைகளுக்கு தீர்வு

இடுகை இடப்பட்ட நாள்: 13 NOV 2026 4:53PM by PIB Chennai

மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் 2026 அக்டோபரில் மேற்கொண்ட தூய்மைக்கான சிறப்பு இயக்கம் 6.0-ன் கீழ், நிலுவையில் உள்ள பணிகளைக் குறைத்தல், பதிவேடுகள் மேலாண்மையை வலுப்படுத்துதல் மற்றும் அரசு அலுவலகங்களில் தூய்மையை மேம்படுத்துதல் ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க சாதனைகளைப் படைத்துள்ளது.

அக்டோபர் 31, 2026 நிலவரப்படி, 736 பொதுமக்களின் குறைகளுக்குத் தீர்வு காணப்பட்டதுடன், நாடாளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து பெறப்பட்ட 448 குறிப்புகள், பிரதமர் அலுவலகத்தின் 100 சதவீதக் குறிப்புகள் மற்றும் ஒரு மாநில அரசுக் குறிப்பு ஆகியவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு தீர்வு காணப்பட்டுள்ளது. மேலும், ஏழு நாடாளுமன்ற உறுதிமொழிகளும் நிறைவேற்றப்பட்டுள்ளன.

16,217 ஆவணக் கோப்புகள், 8,853 மின்னணுக் கோப்புகள் என மொத்தம் 25,070 கோப்புகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. 526 தூய்மை இயக்கங்கள் நடத்தப்பட்டு, பழைய கோப்புகள் மற்றும் தேவையற்ற பொருட்களை அகற்றியதன் மூலம் 10,551 சதுர அடி அலுவலக இடம் தூய்மைப் படுத்தப்பட்டுள்ளது.

மின்னணுக் கழிவுகள் மூலம் பெறப்பட்ட ரூ.40,036 உட்பட, கழிவுப் பொருட்களை அகற்றியதன் மூலம் மொத்தம் ரூ.2,49,656 வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. மேலும், 77 அலகுகளில் மின்னணுக் கழிவு மேலாண்மை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதுடன், எளிமைப்படுத்துவதற்கான நான்கு விதிகள் மற்றும் நடைமுறைகளும் அடையாளம் காணப்பட்டுள்ளன.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2335867&reg=3&lang=1

****

SK/SE/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2336011) வருகையாளர் எண்ணிக்கை : 9
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी