இடுகை இடப்பட்ட நாள்:
13 NOV 2026 4:37PM by PIB Chennai
மத்திய நிதி அமைச்சகத்தின் பொதுத்துறை நிறுவனங்கள் துறையின் கீழ் செயல்படும், மத்திய அரசுக்குச் சொந்தமான தேசிய நிலப் பணமாக்கல் கழகம் (என்எல்எம்சி - NLMC), சென்னை கீழ்ப்பாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள குடியிருப்புக் கட்டடத்தை மின்னணு ஏலம் மூலம் விற்பனை செய்ய அறிவித்துள்ளது.
இதற்கான ஏல அறிவிக்கை கடந்த நவம்பர் 5-ஆம் தேதி வெளியிடப்பட்டது. பிரயாக்ராஜ், சென்னை ஆகிய இடங்களில் உள்ள மொத்தம் 12 குடியிருப்புகளை ஏலம் விடும் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கீழ்ப்பாக்கம் குடியிருப்பின் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச ஏலத் தொகை ரூ.1.64 கோடியாகும்.
முன்னதாக நவம்பர் 20-ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த ஏலதாரர்களுக்கான விளக்கக் கூட்டம், நவம்பர் 28-ஆம் தேதி காலை 11 மணிக்கு மாற்றப்பட்டுள்ளது. ஏல விதிமுறைகள் குறித்து இக்கூட்டத்தில் விளக்கம் பெறலாம்.
ஏலத்தில் பங்கேற்கப் பதிவு செய்து முன்வைப்புத் தொகை செலுத்த வேண்டிய கடைசி நாள் 2026 டிசம்பர் 7.
விருப்பமுள்ளவர்கள் சொத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்யலாம். ஏல விவரங்கள், நிபந்தனைகளை அதிகாரப்பூர்வ இணையதளங்களில் தெரிந்துகொள்ளலாம்.
ஏல இணையதளம்: https://eauction.enivida.com
என்எல்எம்சி இணையதளம்: https://nlmc.dpe.gov.in
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2335853®=3&lang=1
(Release ID: 2335853)
****
SK/PLM/SH