இடுகை இடப்பட்ட நாள்:
12 NOV 2026 7:45PM by PIB Chennai
அகமதாபாத்தில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனத்துடன் (ஐஐஎம்) இணைந்து தயாரிக்கப்பட்ட ‘உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகைத் திட்டங்களின் தாக்க மதிப்பீடு’ அறிக்கையை நித்தி ஆயோக் வெளியிட்டுள்ளது. உள்நாட்டு உற்பத்தித் திறனை மேம்படுத்தவும், தற்சார்பு இந்தியா இலக்கை விரைந்து அடையவும் மத்திய அரசால் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
அறிவிக்கப்பட்ட 14 துறைகளிலும் முதலீடு, கூடுதல் உற்பத்தி, ஏற்றுமதி, வேலைவாய்ப்பு உருவாக்கம் ஆகியவற்றில் இத்திட்டம் ஏற்படுத்தியுள்ள தாக்கம் குறித்து இவ்வறிக்கை ஆய்வு செய்துள்ளது. இதன்படி மருந்துப் பொருட்கள், கைப்பேசி உற்பத்தி, உணவு பதனப்படுத்துதல், தொலைத்தொடர்பு, வாகனங்கள், ட்ரோன் ஆகிய துறைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதில் ட்ரோன் துறை ஆரம்பகட்ட வெற்றியைப் பெற்றுள்ளது.
மேலும், உயர் திறன் கொண்ட சூரிய மின்சக்தி தகடுகள் உற்பத்தித் திறனும் கணிசமாக விரிவடைந்துள்ளது. ஒட்டுமொத்தமாக இலக்கு நிர்ணயிக்கப்பட்ட பிரிவுகளில் சுமார் 70% சரியான பாதையில் பயணிப்பதாகவும், வளர்ச்சியடைந்த இந்தியா 2047 தொலைநோக்குப் பார்வைக்கு இத்திட்டம் வலு சேர்ப்பதாகவும் இவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2335594®=3&lang=1
***
TV/PD/SU