தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

உத்தரப் பிரதேசத்தில் புதிய தொழிலாளர் சட்டங்கள், சமூகப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நிறைவடைந்தது

இடுகை இடப்பட்ட நாள்: 27 OCT 2026 4:48PM by PIB Chennai

மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம், உத்தரப் பிரதேச மாநில தொழிலாளர் துறையுடன் இணைந்து நடத்திய 'ஷ்ராம் சம்வாத்' என்ற இரண்டு நாள் மாநில அளவிலான திறன் மேம்பாடு மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி லக்னோவில் 2026 அக்டோபர் 26, 27 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. புதிய தொழிலாளர் சட்டங்கள், அவற்றின் விதிகள் குறித்து தொழில் நிறுவனங்கள், மனிதவள மேலாண்மை, சட்டம், நிதித்துறை வல்லுநர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

நிகழ்ச்சியின் முதல் நாளில் தொழிலாளர் சட்ட சீர்திருத்தங்கள், முறைசாரா தொழிலாளர்களுக்கான சமூகப் பாதுகாப்பு திட்டங்கள், இ-ஷ்ரம் தளம் உள்ளிட்ட டிஜிட்டல் சேவைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. இதில், மத்திய தொழிலாளர் நலத்துறைச் செயலாளர் டாக்டர் சந்திர பூஷன் குமார், மாநில தொழிலாளர் நலத்துறை அமைச்சர் திரு அனில் ராஜ்பர் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

இரண்டாம் நாளில் புதிய தொழிலாளர் சட்டங்களை நடைமுறைப்படுத்துவது குறித்த தொழில்நுட்ப அமர்வுகள் நடைபெற்றன. ஊதிய விதிகள், பணிச்சூழல் பாதுகாப்பு விதிகள் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2328983&reg=3&lang=1

***

TV/PD/SU


(வெளியீட்டு அடையாள எண்: 2335877) வருகையாளர் எண்ணிக்கை : 15
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी