தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

எல்லைகளைக் கடந்து இணையும் திரைப்படங்கள்: நவம்பர் 20 முதல் 28 வரை கோவாவில் இந்திய சர்வதேசத் திரைப்பட விழா

57-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா, கோவாவில் 2026 நவம்பர் 20 முதல் 28-ம் தேதி வரை ‘எல்லைகளைக் கடந்த கதைகள்’ (Stories Without Borders) என்ற கருப்பொருளில் நடைபெறுகிறது.

கோவா முதலமைச்சர் திரு பிரமோத் சாவந்த், தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் செயலாளர் திரு சஞ்சல் குமார் உள்ளிட்டோர் விழாவுக்கான ஏற்பாடுகள் குறித்து கோவாவில் இன்று (13.11.2026) எடுத்துரைத்தனர்.

இதில் 137 நாடுகளில் இருந்து 1,900-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. அவற்றிலிருந்து 86 நாடுகளைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட வெளிநாட்டுப் படங்கள் திரையிடப்பட உள்ளன.

இந்தியத் திரைப்படப் பிரிவில் 18 மொழிகளில் 76 படங்கள் இடம்பெறுகின்றன. ‘துரந்தர்’, ‘பிகமிங்’ ஆகிய படங்கள் இப்பிரிவில் தொடக்கமாக அமைகின்றன. பிரிக்ஸ் நாடுகளின் திரைப்படங்களுக்கான சிறப்புப் பிரிவில் இந்தியாவின் ‘ராமாயணம்’ இடம்பெறுகிறது. ஸ்பெயின் சிறப்பு நாடாகவும், ரஷ்யா கூட்டாளர் நாடாகவும் இதில் பங்கேற்கின்றன.

மேலும், ஏழு நாடுகளைச் சேர்ந்த புதிய இயக்குநர்களின் ஏழு படங்கள் அறிமுகப் படங்களுக்கான போட்டியில் இடம்பெறுகின்றன. 52 பெண் இயக்குநர்களும், 62 அறிமுக இயக்குநர்களும் விழாவில் பங்கேற்கின்றனர்.

திரைப்படத் துறையில் புதிய திறமைகளை ஊக்குவிக்க 100 இளம் படைப்பாளிகளுடன் பயிற்சிகள், கருத்தரங்குகள், 48 மணி நேரத் திரைப்படத் தயாரிப்புப் போட்டி ஆகியவை நடத்தப்படுகின்றன.

வேவ்ஸ் திரைப்படச் சந்தை மூலம் சர்வதேசத் திரைப்படத் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் இணைந்து செயல்பட வாய்ப்பளிக்கப்படுகிறது. நெட்ஃபிளிக்ஸ் நிறுவனமும் இதில் பங்கேற்கிறது. கோவாவின் நான்கு இடங்களில் 13 திரையரங்குகளில் 4,000-க்கும் மேற்பட்ட இருக்கைகளுடன் படங்கள் திரையிடப்பட உள்ளன.

1952-ல் தொடங்கப்பட்ட இந்த விழா, ஆசியாவின் பழமையான சர்வதேசத் திரைப்பட விழாக்களில் ஒன்றாகும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2335780&reg=3&lang=1

***

TV/PLM/SU


(வெளியீட்டு அடையாள எண்: 2335843) வருகையாளர் எண்ணிக்கை : 10
இந்த வெளியீட்டை படிக்க: Marathi , English , Gujarati , Urdu , Kannada