நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
இடுகை இடப்பட்ட நாள்:
13 NOV 2026 1:04PM by PIB Chennai
ஓலா செயலியில், பயணத்துக்கு முன்பே அன்பளிப்பு (‘டிப்ஸ் - tips) அல்லது ‘கூடுதல் கட்டணம்’ செலுத்துமாறு வாடிக்கையாளர்களிடம் கேட்டதற்காக, அதை நடத்தும் ஏஎன்ஐ டெக்னாலஜிஸ் நிறுவனத்துக்கு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையமான சிசிபிஏ (CCPA) ரூ.10 லட்சம் அபராதம் விதித்துள்ளது. மேலும், இந்த டிப்ஸ் நடைமுறையை உடனடியாக நிறுத்த உத்தரவிட்டுள்ளது.
ஓலா செயலியில், கூடுதல் பணம் செலுத்தினால் விரைவாக வாகனம் கிடைக்க வாய்ப்புள்ளதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், 2026 ஜூன் 1 முதல் 15 வரையிலான நிறுவனத்தின் சொந்தத் தரவுகளின்படி, கூடுதல் பணம் செலுத்தியவர்களின் வாகன பதிவுக் கோரிக்கைகள் ஏற்கப்பட்ட விகிதம் குறைவாகவே இருந்தது.
இந்த விவரங்களை வாடிக்கையாளர்களிடம் தெரிவிக்காததும், கூடுதல் பணம் செலுத்தாவிட்டால் வாகனம் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம் என்ற அச்சத்தை உருவாக்கியதும் தவறான வணிக நடைமுறை என ஆணையம் தெரிவித்துள்ளது.
மேலும், பயணம் முடிந்த பிறகே விருப்பத்தின் அடிப்படையில் டிப்ஸ் (அன்பளிப்பு) வழங்க வேண்டும் என வழிகாட்டுதல்கள் கூறுகின்றன. இதற்கு மாறாக ஓலா செயல்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
எனவே, பயணம் முடிவதற்கு முன்பு டிப்ஸ், கூடுதல் கட்டணம் என எந்தப் பெயரிலும் பணம் கேட்கும் அறிவிப்புகள் உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் நீக்கவும், நுகர்வோர் பாதுகாப்புச் சட்ட விதிகளைப் பின்பற்றவும் ஓலா நிறுவனத்துக்கு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இதே விவகாரத்தில் ரேபிடோ நிறுவனத்துக்கும் ஏற்கெனவே ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஊபர், ‘நம்ம யாத்ரி’ நிறுவனங்கள் மீதான விசாரணை நடைபெற்று வருகிறது.
புகார் தெரிவிக்க: தேசிய நுகர்வோர் உதவி எண் 1915 அல்லது com-ccpa[at]gov[dot]in என்ற மின்னஞ்சலை அணுகலாம்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2335741®=3&lang=1
***
TV/PLM/SU