சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
இடுகை இடப்பட்ட நாள்:
12 NOV 2026 7:26PM by PIB Chennai
உயர் கல்வியைத் தொடரும் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு மாணவிகள் பாதுகாப்பான தங்குமிட வசதிகளைப் பெறுவதை மேம்படுத்தும் நோக்கில், மத்திய சமூக நீதி, அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் ஆதரவுடன் விடுதித் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
திரிபுராவின் மேற்கு அகர்தலாவில் அமைந்துள்ள 'பகினி நிவேதிதா சத்ரி நிவாஸ்' என்பது, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பெண்கள், கல்லூரி, பல்கலைக்கழகக் கல்வியைத் தொடர்வதற்கு ஆதரவளிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட ஒரு விடுதி அமைப்பாகும். கட்டிமுடிக்கப்பட்டதும், முன்மொழியப்பட்ட 54 படுக்கை வசதிகளைக் கொண்ட இந்த விடுதி, தொலைதூரப் பகுதிகளிலிருந்து வரும் மாணவிகளுக்கு ஆதரவளிப்பதுடன், உயர்கல்விக்கு மிகவும் உகந்த சூழலை உருவாக்கவும் பங்களிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2335582®=3&lang=1
***
TV/BR/SU