‘எல்லைகளற்ற கதைகள்’ என்ற கருப்பொருளின் கீழ், 57-வது இந்திய சர்வதேசத் திரைப்பட விழா (ஐஎஃப்எஃப்ஐ), 2026 நவம்பர் 20 முதல் 28 வரை கோவாவில் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வு, உலகம் முழுவதிலுமிருந்து திரைப்படத் தயாரிப்பாளர்கள், திரைப்பட ஆர்வலர்கள், படைப்பாற்றல் மிக்க கலைஞர்களை ஒன்றிணைக்கும்.
இந்த விழாவின் சிறப்பம்சங்களை எடுத்துரைக்கும் செய்தியாளர் சந்திப்பு, நவம்பர் 13 அன்று, கோவாவில் நடைபெறவுள்ளது. மாநில முதலமைச்சர் டாக்டர் பிரமோத் சாவந்த், கோவா பொழுதுபோக்கு சங்கத்தின் துணைத் தலைவர் திருமதி டெலைலா லோபோ, தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் செயலாளர் திரு சஞ்சல் குமார், தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகத் தலைவர் திரு ஜி. கிருஷ்ணகுமார், நிர்வாக இயக்குநர் திரு தீரஜ் சிங், ஐஎஃப்எஃப்ஐ 2026-ன் இயக்குநர் திரு அசுதோஷ் கோவாரிகர் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள்.
திரைப்பட விழாவின் உலகளாவிய செல்வாக்கு அதிகரித்து வருவதை உணர்த்தும் வகையில், அதன் 57-வது பதிப்பு, இந்திய, சர்வதேசத் திரைப்படங்களின் செழுமையைக் கொண்டாடும் வகையில் விரிவான, பன்முகத்தன்மை கொண்ட நிகழ்ச்சிகளை வழங்கவுள்ளது. இந்தச் செய்தியாளர் சந்திப்பில், திரைப்பட விழாவில் இடம்பெறவுள்ள அம்சங்கள் குறித்த விவரங்கள் பகிரப்படுவதுடன், உலகம் முழுவதிலுமிருந்து வருகை தரும் பார்வையாளர்கள், பங்கேற்பாளர்களுக்காகத் திட்டமிடப்பட்டுள்ள திரை அனுபவங்கள், ஆக்கபூர்வமான பரிமாற்றங்கள் குறித்த முக்கிய அம்சங்களும் முன்வைக்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2335622®=48&lang=2
****
TV/BR/SH