கனரகத் தொழில்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

10 ஜிகாவாட் அளவிலான வேதியியல் மின்கல உற்பத்தி ஆலைகளை அமைப்பதற்கான ஏலம்: 22 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன

இடுகை இடப்பட்ட நாள்: 12 NOV 2026 4:48PM by PIB Chennai

இந்தியாவில் 10 ஜிகாவாட் திறன்கொண்ட மேம்பட்ட வேதியியல் மின்கல உற்பத்தி ஆலைகளை நிறுவுவதற்கான நிறுவனங்களைத் தேர்ந்தெடுப்பதற்கான ஏலத்தில் பங்கேற்க  22 விண்ணப்பங்களை கனரக தொழில்துறை அமைச்சகம் பெற்றுள்ளது. இந்த 10 ஜிகாவாட் கொள்ளளவு, மின் தொகுப்பு அளவிலான நிலையான சேமிப்பு பயன்பாடுகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இது, 'மேம்பட்ட வேதியியல் மின்கல பேட்டரி சேமிப்பு குறித்த தேசியத் திட்டத்தின்' கீழ் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள ஒட்டுமொத்த 50 ஜிகாவாட் உற்பத்தித் திறனில் ஒரு பகுதியாகும். இந்த ஏலம், வெளிப்படையான முறையில் இணையவழியில் நடத்தப்படுகிறது.

இந்தியாவின் உள்நாட்டு மேம்பட்ட வேதியியல் மின்கல உற்பத்தித் திறனை மேம்படுத்துவதையும், உலகளாவிய அளவில் போட்டியிடும் திறன் கொண்ட மேம்பட்ட வேதியியல் மின்கல உற்பத்திச் சூழலை இந்தியாவில் உருவாக்குவதற்காக, உள்நாட்டு, சர்வதேச அளவில் முன்னிலை வகிக்கும் நிறுவனங்கள் முதலீடு செய்து உற்பத்தி ஆலைகளை நிறுவுவதை ஊக்குவிப்பதையும் இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த டெண்டரில் காணப்பட்ட வலுவான பங்கேற்பு, தொழில்துறையினரிடையே இந்தியாவின் மேம்பட்ட வேதியியல் மின்கல உற்பத்தித் திறனில் அதிகரித்து வரும் ஆர்வத்தைப் பிரதிபலிக்கிறது. மேலும், 2047-ல் வளர்ச்சியடைந்த இந்தியா தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப, தொழில்நுட்ப ரீதியாகச் சுயசார்பு கொண்ட, உலகளவில் போட்டியிடக்கூடிய, நிலையான சூழலியலை  உருவாக்குவதற்கான அரசின் உறுதிப்பாட்டை இது மேலும் வலுப்படுத்துகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2335459&reg=3&lang=1&_gl=1

****

TV/BR/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2335643) வருகையாளர் எண்ணிக்கை : 5
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी