வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்
தூய்மைக்கான சிறப்பு இயக்கம் 6.0-ன் கீழ், தூய்மை, வளங்களின் சீரான பயன்பாடு, பணியாளர் நலன் ஆகியவற்றை ஹட்கோ ஊக்குவிக்கிறது
இடுகை இடப்பட்ட நாள்:
12 NOV 2026 3:58PM by PIB Chennai
ஹட்கோ நிறுவனம், தனது பெருநிறுவன அலுவலகம், மண்டல அலுவலகங்கள் வாயிலாக, தூய்மை, பயனுள்ள கழிவு மேலாண்மை, பணியிட மேம்பாட்டை ஊக்குவிக்கும் பல்வேறு முன்முயற்சிகளை மேற்கொண்டது. இந்த இயக்கத்தின் ஒரு பகுதியாக, தூய்மைப் பணிகள், உறுதிமொழி ஏற்பு, பிளாஸ்டிக் கழிவுகளின் சேகரிப்பு, விழிப்புணர்வு நடவடிக்கைகள், அலுவலக வளாகத்தைச் சீரமைத்தல், பழைய கோப்புகள்/ ஆவணங்களை அகற்றுதல், பயன்பாடற்ற பொருட்கள், காலாவதியான தகவல் தொழில்நுட்ப உபகரணங்கள், தேவையற்ற இதர பொருட்களை அங்கீகரிக்கப்பட்ட நடைமுறைகளின்படி அப்புறப்படுத்துதல் போன்ற செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2335419®=3&lang=1
****
TV/BR/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2335629)
வருகையாளர் எண்ணிக்கை : 5