இடுகை இடப்பட்ட நாள்:
12 NOV 2026 4:10PM by PIB Chennai
இந்திய வர்த்தக மேம்பாட்டு அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 45-வது இந்திய சர்வதேச வர்த்தகக் கண்காட்சி புதுதில்லியில் உள்ள பாரத மண்டபத்தில் நவம்பர் 14 முதல் 27 வரை நடைபெறவுள்ளது. மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் நாளை (2026 நவம்பர் 13) இக்கண்காட்சியைத் தொடங்கி வைக்கிறார்.
‘வளர்ச்சியும் பாரம்பரியமும்’ என்ற கருப்பொருளில் நடைபெறும் இக்கண்காட்சியில் 17 அரங்குகளில் இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 3,500-க்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்கள் பங்கேற்கின்றனர். 32 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள், 51 மத்திய அமைச்சகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் இதில் பங்கேற்கின்றன. பீகார், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம் ஆகியவை கூட்டாளி மாநிலங்களாகவும், அசாம், தில்லி, ஜார்க்கண்ட், மேற்கு வங்கம் ஆகியவை சிறப்பு கவனம் செலுத்தும் மாநிலங்களாகவும் இடம்பெற்றுள்ளன. தாய்லாந்து, ஈரான், ஐக்கிய அரபு அமீரகம், இலங்கை உள்ளிட்ட 11 நாடுகளும் இக்கண்காட்சியில் பங்கேற்கின்றன.
இதில் சுமார் புத்தொழில் நிறுவனங்களுக்கான 600 சிறப்பு அரங்கங்கள், 21 மாநிலங்கள் சார்பில் ‘ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு’ அரங்கங்கள், 90-க்கும் மேற்பட்ட உணவகங்கள், 87 கலை நிகழ்ச்சிகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன. நவம்பர் 14 முதல் 18 வரை வணிகர்களுக்கான நாட்களாகவும், நவம்பர் 19 முதல் 27 வரை பொதுமக்களுக்கான நாட்களாகவும் இக்கண்காட்சி நடைபெறும். முதியோர்கள், மாற்றுத்திறனாளிகளுக்குப் பொது நாட்களில் இலவச அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2335428®=3&lang=1&_gl=1
****
AD/PD/SH