நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சென்னை துறைமுகத்தில் செம்மரக் கட்டைகள் கடத்தல் கும்பல் பிடிபட்டது: ரூ.7 கோடி மதிப்பிலான சுமார் 13,000 கிலோ செம்மரக் கட்டைகள் பறிமுதல்; மூவர் கைது

இடுகை இடப்பட்ட நாள்: 12 NOV 2026 6:03PM by PIB Chennai

சென்னையைச் சேர்ந்த செம்மரக் கட்டைகள் கடத்தல் கும்பல் மலேசியாவிற்கு செம்மரக் கட்டைகளைக் கடத்த முயற்சிப்பதாகக் கிடைத்த உளவுத் தகவலின் அடிப்படையில், வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள், 2026 நவம்பர் 9 முதல் 11 வரை சென்னை துறைமுகத்தில் கப்பலில் ஏற்றப்படவிருந்த ஏற்றுமதி கொள்கலன்களைச் சோதனையிட்டனர்.

காகிதச் சுருள்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த அந்தக் கொள்கலனில் நடத்தப்பட்ட விரிவான சோதனையில், சிறிய அளவிலான காகிதச் சுருள்கள், ஜல்லிக் கற்களுக்கு இடையே மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ.7.72 கோடி மதிப்பிலான 12.87 மெட்ரிக் டன் உயர்தர செம்மரக் கட்டைகள் கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன.

ஏற்றுமதியாளருக்கு வழங்கப்பட்ட சுய-முத்திரையிடும் வசதியைத் தவறாகப் பயன்படுத்தி, கொள்கலனைத் தனியார் கிடங்கிற்குக் கொண்டு சென்று காகிதச் சுருள்களுக்குப் பதிலாக செம்மரக் கட்டைகளை மாற்றி அனுப்பியிருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கிடங்கில் நடத்தப்பட்ட சோதனையில் அசல் சரக்குகள், எடை இயந்திரம், செம்மரத் துகள்கள் மீட்கப்பட்டன. இக்கடத்தலில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வனஉயிரினங்கள் பாதுகாப்புச் சட்டம், 1972 மற்றும் வெளிநாட்டு வர்த்தகக் கொள்கையின் கீழ் பாதுகாக்கப்பட்ட மர வகையான செம்மரத்தை இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2335529&reg=3&lang=1

****

AD/PD/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2335588) வருகையாளர் எண்ணிக்கை : 5
இந்த வெளியீட்டை படிக்க: English , Gujarati , Urdu , हिन्दी