ஆயுஷ்
azadi ka amrit mahotsav

டெல்லி பல்கலைக்கழக வடக்கு வளாகத்தின் மருத்துவத் தாவரப் பன்முகத்தன்மையை ஆவணப்படுத்த சிசிஆர்ஏஎஸ் – சிஏஆர்ஐ மற்றும் டெல்லி பல்கலைக்கழகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து

இடுகை இடப்பட்ட நாள்: 12 NOV 2026 5:25PM by PIB Chennai

மத்திய ஆயுர்வேத அறிவியல் ஆராய்ச்சி கவுன்சில் (சிசிஆர்ஏஎஸ்) - மத்திய ஆயுர்வேத ஆராய்ச்சி நிறுவனம் (சிஏஆர்ஐ) மற்றும் டெல்லி பல்கலைக்கழகம் இணைந்து, வடக்கு வளாகத்தில் உள்ள ஆயுர்வேத மருத்துவத் தாவரங்களை ஆவணப்படுத்தும் கூட்டுத் திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நவம்பர் 10, 2026 அன்று கையெழுத்திட்டன.

டெல்லி பல்கலைக்கழகத்தின் 250-300 ஏக்கர் பரப்பளவிலான வடக்கு வளாகத்தில் உள்ள மருத்துவத் தாவரங்களை முறையாக அடையாளம் காண்பதும், பாதுகாப்பதும் இதன் முக்கிய நோக்கமாகும். விரிவான கள ஆய்வுகள், உலர் தாவர மாதிரிகள் தயாரித்தல் மற்றும் தாவரங்களின் விவரங்களை எளிதில் அறிய வளாகம் முழுவதும் கியூஆர்-குறியீடு கொண்ட பெயர்ப்பலகைகளை நிறுவுதல் பணிகள் மேற்கொள்ளப்படும்.

வளாகத்தின் மருத்துவத் தாவரங்களை விளக்கும் வண்ணப் புகைப்படப் புத்தகம் மற்றும் கூட்டு ஆராய்ச்சிக் கட்டுரைகள் வெளியிடப்படவுள்ளன.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2335496&reg=3&lang=1&_gl=1

****

AD/NB/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2335575) வருகையாளர் எண்ணிக்கை : 8
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी