பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப் பள்ளி மாணவர்களுடன் கலந்துரைடினார்

இடுகை இடப்பட்ட நாள்: 12 NOV 2026 5:31PM by PIB Chennai

பகவான் பிர்சா முண்டாவின் 151-வது பிறந்தநாளை  பழங்குடியினர் கௌரவ இருவாரவிழா 2026'-ன் ஒரு பகுதியாக, நாடு முழுவதிலுமிருந்து தேர்வு செய்யப்பட்ட 146 ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப் பள்ளி (EMRS) மாணவர்கள் மற்றும் முன்னாள் மாணவர்களுடன் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு புதுடெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று (12 நவம்பர் 2026) கலந்துரையாடினார்.

உயர்கல்வி பயின்று மருத்துவர்கள், பொறியாளர்கள் மற்றும் நிர்வாகிகளாக உயர்ந்தாலும், மாணவர்கள் தங்களின் பழங்குடியினப் பாரம்பரியம், கலாச்சார அடையாளம் மற்றும் கிராமங்களின் வளர்ச்சிக்குத் தொடர்ந்து பங்களிக்க வேண்டும் எனக் குடியரசுத் தலைவர் வலியுறுத்தினார். 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளில் முதலிடம் பிடித்தவர்கள் மற்றும் ஐஐடி, என்ஐடி, தேசிய சட்ட பல்கலைக்கழகங்கள், அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்து பயிலும் மாணவர்கள் இதில் பங்கேற்றனர்.

சிறந்த முறையில் செயல்படும் பள்ளிகளின் முதல்வர்கள் மற்றும் பழங்குடியின ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்குக் குடியரசுத் தலைவர் விருதுகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மத்திய பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் திரு. ஜுவல் ஓரம் வரவேற்புரை நிகழ்த்தினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2335501®=3&lang=1&_gl=1

****

AD/NB/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2335569) வருகையாளர் எண்ணிக்கை : 7
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी