வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சிறப்பு தூய்மை இயக்கம் 6.0-ன் மூலம் தூய்மை, நிர்வாகத் திறனை மத்திய பொதுப்பணித் துறை வலுப்படுத்தியது

இடுகை இடப்பட்ட நாள்: 12 NOV 2026 3:55PM by PIB Chennai

சிறப்பு தூய்மை இயக்கம் 6.0-ல் மத்திய பொதுப்பணித் துறை சிறப்பான பணிகளை மேற்கொண்டது. இத்துறையின் சம்மந்தப்பட்ட அதிகாரிகளின் பணிகளுக்காகவும், அலுவலகங்களுக்காகவும், மத்திய பொதுப்பணித் துறை இணையதளம், சமூகஊடக வலைதளங்கள் ஆகியவை பெருமளவில் பயன்படுத்தப்பட்டது.

இந்த இயக்கத்தின்போது பிரதமர் அலுவலகத்தின் இரண்டு குறிப்புகளுக்கு தீர்வு காணப்பட்டது. பொதுமக்களின் 386 குறைகளுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் 21 குறிப்புகளுக்கும் தீர்வு காணப்பட்டது. 7,759 நேரடி கோப்புகள் ஆய்வு செய்யப்பட்டத்தில் 4,102 கோப்புகள் நீக்கப்பட்டது. 428 மின் கோப்புகள் ஆய்வு செய்யப்பட்டது. நிலுவையில் இருந்த பொதுமக்களின் 70 மேல்முறையீடுகளுக்கு தீர்வு காணப்பட்டது.

பழையப் பொருட்களை அகற்றியதன் மூலம் ரூ.2,07,620 வருவாய் ஈட்டப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2335418&reg=3&lang=1

***

SS/IR/SM/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2335527) வருகையாளர் எண்ணிக்கை : 4
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी