சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
இடுகை இடப்பட்ட நாள்:
11 NOV 2026 8:01PM by PIB Chennai
புதுதில்லியில் உள்ள தில்லி ஹாட்டில் நடைபெற்று வரும் கைவினைப்பொருட்கள் கண்காட்சி 2026-ல், நவம்பர் 1 முதல் 10 வரை ரூ.73.49 லட்சம் அளவிற்குப் பொருள்கள் விற்பனையாகியுள்ளன.
மத்திய சமூக நீதி, அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் நான்கு தேசிய மேம்பாட்டுக் கழகங்கள் இணைந்து நடத்தும் இந்த 15 நாள் கண்காட்சியில் 130-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் கைவினைப்பொருட்கள், கைத்தறி ஆடைகள், வீட்டு அலங்காரப் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
பட்டியல் இனத்தவர், பிற்படுத்தப்பட்டோர், தூய்மைப் பணியாளர்கள், மாற்றுத்திறனாளி கைவினைக்கலைஞர்களுக்கு இலவச அரங்குகள், பயணச் செலவு ஏற்பு உள்ளிட்ட வசதிகளை அமைச்சகம் வழங்கியுள்ளது. நவம்பர் 15 வரை நடைபெறும் இக்கண்காட்சியில் தினமும் மாலையில், நாட்டுப்புற நடனங்கள், பாரம்பரிய இசை நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகின்றன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2335194®=48&lang=2
***
TV/PD/RJ