புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பாலினத் தரவு, புள்ளிவிவரங்கள் குறித்த தேசிய மாநாடு

இடுகை இடப்பட்ட நாள்: 02 NOV 2026 7:04PM by PIB Chennai

மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகமும், ஐ.நா. பெண்கள் அமைப்பும்  இணைந்து "பாலினத் தரவுகள் மற்றும் புள்ளிவிவரங்கள்: ஆதாரங்களிலிருந்து கொள்கை நுண்ணறிவுகள் வரை" என்ற தலைப்பிலான ஒரு நாள் தேசிய மாநாட்டை, இன்று  புதுதில்லியில் நடத்தின. ஆதாரங்களின் அடிப்படையிலான கொள்கை உருவாக்கத்திற்காக, பாலினப் புள்ளிவிவரங்களின் பகுப்பாய்வையும் பயன்பாட்டையும் வலுப்படுத்துவது குறித்து விவாதிப்பதற்காக, இந்த மாநாடு கொள்கை வகுப்பாளர்கள், மத்திய அமைச்சகங்கள்/துறைகள், மாநில அரசுகளின் பிரதிநிதிகள், புள்ளிவிவரவியலாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், கல்வி நிறுவனங்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், ஐ.நா. அமைப்புகளின் பிரதிநிதிகளை ஒன்றிணைத்தது.

இந்தியாவிற்கான ஐரோப்பிய ஒன்றியத் தூதர் திரு ஜான்-எரிக் பாக்கே, பாலின சமத்துவத்தை மேம்படுத்துவதிலும், பொருளாதார நடவடிக்கைகளில் பெண்களின் பங்களிப்பை அதிகரிப்பதிலும் ஐரோப்பிய ஒன்றியம்–இந்தியா இடையிலான உத்திசார் கூட்டாண்மையின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் உறுப்பினர் டாக்டர் ஷாமிகா ரவி, நலத்திட்டங்களைச் சென்றடைவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம், பெண்களுக்கு நிதி அதிகாரமளித்தல் முதலியவை குறித்துப் பேசினார். அதேவேளையில், கொள்கை சீர்திருத்தங்களுக்கு வழிகாட்டும் வகையில், வேலைவாய்ப்பின் தரத்தை மேம்படுத்துதல், மாநில அளவிலான பகுப்பாய்வு, பாலினம் சார்ந்த வலுவான புள்ளிவிவரங்களின் அவசியத்தையும்  அவர் வலியுறுத்தினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2331749&reg=3&lang=1

***

TV/RB/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2335414) வருகையாளர் எண்ணிக்கை : 9
இந்த வெளியீட்டை படிக்க: हिन्दी , Kannada , English , Urdu