இடுகை இடப்பட்ட நாள்:
02 NOV 2026 8:27PM by PIB Chennai
மத்திய பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) 2026 ஏப்ரல் மாதம் நடத்திய ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவைகள் தேர்வு (I) மற்றும் பாதுகாப்பு அமைச்சகத்தின் சேவைகளுக்காக மத்திய தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட நேர்காணல்களின் அடிப்படையில், தகுதி பெற்ற 243 (155 + 63 + 25) விண்ணப்பதாரர்களின் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளன. இதில் தேர்வாளர்கள், டேராடூனில் உள்ள இந்திய ராணுவ அகாடமி - 162-வது பயிற்சி வகுப்பு, எழிமலாவில் உள்ள இந்திய கடற்படை அகாடமி, ஹைதராபாத்தில் உள்ள விமானப்படை அகாடமி பயிற்சி வகுப்பு ஆகியவற்றில் இணைய முடியும்.
இந்திய ராணுவ அகாடமியில் 100 இடங்களும், கேரள மாநிலம் எழிமலாவில் உள்ள இந்திய கடற்படை அகாடமியின் நிர்வாகப் பிரிவில் 26 இடங்களும், ஹைதராபாத்தில் உள்ள விமானப்படை அகாடமியில் 32 இடங்களும் காலியாக உள்ளன. http://www.upsc.gov.in என்ற மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளத்தில் தேர்வு முடிவுகளை அணுகலாம்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2331786®=3&lang=1
***
TV/RB/RJ