பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

புதுதில்லியில் தேசிய பழங்குடியினர் இலக்கியத் திருவிழா: நவம்பர் 12, 13-ல் கோலாகலக் கொண்டாட்டம்

இடுகை இடப்பட்ட நாள்: 11 NOV 2026 7:44PM by PIB Chennai

பழங்குடியின மக்களின் மொழிகள், வாய்மொழி மரபுகள் மற்றும் சுதேசி இலக்கிய பாரம்பரியத்தைப் பாதுகாக்கும் நோக்கில், மத்திய பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம் சார்பில் தேசிய பழங்குடியினர் இலக்கியத் திருவிழா நவம்பர் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் தில்லி இந்தியா ஹேபிடேட் மையத்தில் நடைபெறுகிறது.

'பழங்குடியினர் கௌரவ தினம் 2026' கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக மத்திய பழங்குடியின நலத்துறை அமைச்சர் திரு. ஜூவல் ஓரம்  விழாவைத் தொடங்கி வைக்கிறார்.

வளர்ச்சியடைந்த இந்தியா இலக்கை அடைவதில் பழங்குடியினரின் கலாச்சாரப் பங்களிப்பு மிக அவசியமானது என்பதை இது வலியுறுத்துகிறது. நாடு முழுவதிலுமிருந்து வரும் பழங்குடியின எழுத்தாளர்கள், கவிஞர்கள் மற்றும் அறிஞர்கள் கலந்துகொள்ளும் இந்நிகழ்ச்சியில், பழங்குடி மக்களின் நாட்டார் வழக்காறுகள், நாட்டுப்புறப் பாடல்கள் மற்றும் இலக்கியப் படைப்புகள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2335187&reg=48&lang=2

***

SK/VK/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2335303) வருகையாளர் எண்ணிக்கை : 8
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी